மேலும் அறிய

Joju George: ‘ஆள விடுங்கடா சாமி’ : நெகடிவ் விமர்சனங்களை தாங்க முடியாமல் சமூக வலைதளங்களுக்கு டாட்டா சொன்ன ஜோஜூ

Joju George: பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தனக்கு வந்த நெகடிவ் விமர்சனங்களைும், ட்ரோல்களையும் தாங்க முடியாமல் தனது சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக் எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் பிரபல நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் ஜோஜூ ஜார்ஜ். இவர் மலையாள நடிகர்களான பகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், இரட்டா என்ற மலையாளப்படத்தில் இரட்டை வேடங்களில் ஹீரோவாக நடித்து இப்படத்தை தயாரித்தும் வழங்கினார். க்ரைம் த்ரில்லர் படமான இதனை ரோஹித் எம்.ஜி கிருஷ்ணன் என்ற புதிய இயக்குனர், டைரக்டு செய்தார். படம், கடந்த 3-ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களையே பெற்றது. 

ஜோஜூ ஜார்ஜின் வீடியோ:

இரட்டா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளின் போது படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் நெகடிவ் விமர்சனங்கள் குறித்து பேசினார். அப்போது, படம் பார்க்காத பலர் படம் குறித்து தவறான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பேசி வருவதாக தெரிவித்தார். மேலும், ஒரு படத்தை உருவாக்குவதற்கு பின் பலரது உழைப்பு இருப்பதாகவும், பலர் இதை நம்பிதான் பிழைப்பு நடத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த விஷயம், பட்டி தொட்டியெங்கும் வைரலாக பரவ, நடிகரின் கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு சிலரோ ஒரு படி மேலே போய்,  இரட்டா படத்தில் இவரது நடிப்பை கலாய்க்கும் வகையில் மீம்ஸ்களை வெளியிட்டு ட்ரோல் செய்தனர். 

Joju George: ‘ஆள விடுங்கடா சாமி’ : நெகடிவ் விமர்சனங்களை தாங்க முடியாமல் சமூக வலைதளங்களுக்கு டாட்டா சொன்ன ஜோஜூ

நெட்டிசன்களின் தொல்லையால் செம கடுப்பான ஜோஜூ, தான் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பின்வருமாறு பேசியுள்ளார். 

“கடந்த சில நாட்களாக அனைத்து வகை ஊடகங்களையும் நான் தவிர்த்து வருகிறேன். இரட்டா படத்திற்காக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க பல முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், மறுபடியும் என்னுடன் பலர் தேவையற்ற மோதல்களில் ஈடுபடுகின்றனர். இனி, நான் பட வேலைகளில் மட்டும் கவனம் செலுத்த உள்ளேன். தற்போது, தொழில் ரீதியாக நான் நல்ல நிலையில் இல்லை. என்னை தயவு செய்து தொல்லை செய்யாதீர்கள். எனக்கு உங்களது உதவி தேவையில்லை. என்னை யாரும் என்னை யாரும் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே, அது எனக்கு பெரிய உதவி.

இவ்வாறு, ஜோஜூ ஜார்ஜ் அந்த வீடியோவில் பேசியுள்ளார். இதையடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ வைரலானது. ஜோஜூ, வீடியோ வைரலானவுடன் அந்த பதிவை தனது சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார். 

Also Read:Cinema News Today LIVE: சினிமா வட்டாரத்தில் நடக்கும் சவாரஸ்யமான நிகழ்வுகள்.. உடனுக்குடன் அப்டேட் இதோ!

மீண்டும் அதே கதை..

2021ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியினருடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக, ஜோஜூ தனது சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து விலகினார். இரட்டா படத்தின் ப்ரமோஷனிற்காக கடந்த ஆண்டு, மீண்டும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவானார் ஜோஜூ என்பது குறிப்பிடத்தக்கது. 

Joju George: ‘ஆள விடுங்கடா சாமி’ : நெகடிவ் விமர்சனங்களை தாங்க முடியாமல் சமூக வலைதளங்களுக்கு டாட்டா சொன்ன ஜோஜூ

மம்மூட்டி ரசிகர்கள் செய்யும் சதியா?

நடிகர் ஜோஜூ ஜார்ஜ், இரட்டா படத்தின் போஸ்டர்கள் மற்றும் போட்டோக்களில் முருக்கு மீசை வைத்து, வேட்டி கட்டிய பெரிய ஆள் போல காட்சியளித்தார். இரட்டா படத்தின் போஸ்டர்கள் வெளியான புதிதில் மம்மூட்டி ரசிகர்கள் பலர், “இந்த கதையில் மம்மூட்டி நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்றும் “மம்மூட்டியைப் பார்த்து ஜோஜூ காப்பியடிப்பதாகவும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். இதனால், ஜோஜூ சமூக வலைதளத்தை விட்டுப்போனது, ஒரு வேளை மம்மூட்டி ரசிகர்கின் சதியாக இருக்குமோ என பலர் கருத்துகளை பரிமாறி வருகின்றனர். 

மம்மூட்டி கடைசியாக நடித்த கிரிஸ்டோபர் படத்தில் தனது நடிப்பிற்காக ரசிகர்களிடமிருந்து ஏக வசனங்களை எக்கச்சக்கமாக வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Muthusamy : ”ஈரோடு திமுகவில் உள்ளடி வேலை?” அமைச்சர் முத்துச்சாமிக்கு எதிராக உடன்பிறப்புகள்..!
Minister Muthusamy : ”ஈரோடு திமுகவில் உள்ளடி வேலை?” அமைச்சர் முத்துச்சாமிக்கு எதிராக உடன்பிறப்புகள்..!
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
எச்.ராஜா மீது நடவடிக்கை இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராடுவோம் - மனித நேய மக்கள் கட்சி
எச்.ராஜா மீது நடவடிக்கை இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராடுவோம் - மனித நேய மக்கள் கட்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Muthusamy : ”ஈரோடு திமுகவில் உள்ளடி வேலை?” அமைச்சர் முத்துச்சாமிக்கு எதிராக உடன்பிறப்புகள்..!
Minister Muthusamy : ”ஈரோடு திமுகவில் உள்ளடி வேலை?” அமைச்சர் முத்துச்சாமிக்கு எதிராக உடன்பிறப்புகள்..!
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
எச்.ராஜா மீது நடவடிக்கை இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராடுவோம் - மனித நேய மக்கள் கட்சி
எச்.ராஜா மீது நடவடிக்கை இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராடுவோம் - மனித நேய மக்கள் கட்சி
Group 2 Exam: சூப்பர்! குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - எத்தனை இடங்கள் தெரியுமா?
Group 2 Exam: சூப்பர்! குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - எத்தனை இடங்கள் தெரியுமா?
Sabarimala: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.... சாமியை தரிசனம் செய்வது எப்படி? - புதிய அறிவிப்பு இதோ
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.... சாமியை தரிசனம் செய்வது எப்படி? - புதிய அறிவிப்பு இதோ
CM MK Stalin:
CM MK Stalin: "பட்டாசு தொழிலாளர்கள் சந்திப்பு முதல் ரோட் ஷோ வரை" விருநுகரில் இன்று முதலமைச்சர் ப்ளான் இதுதான்!
Pakistan: கொடூரம்! 22 பேர் மரணம்! பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலால் பயங்கரம்
Pakistan: கொடூரம்! 22 பேர் மரணம்! பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலால் பயங்கரம்
Embed widget