மேலும் அறிய

Bhavatharini Death: தேவதை குரல் கொண்ட பெண்.. பாடகி பவதாரிணி மறைவால் மனமுடைந்த பிரபலங்கள்

இசைஞானியின் இளையராஜாவின் மகளான பவதாரிணி, பிரபல பின்னணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

பிரபல பின்னணி பாடகி பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி திரையுலகினரை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள்,ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இசைஞானியின் வாரிசு

இசைஞானியின் இளையராஜாவின் மகளான பவதாரிணி, பிரபல பின்னணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வந்தார். தனித்துவமான குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட அவர் தனது 47வது வயதில் கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். இந்த பிரச்சினைக்காக இலங்கைக்கு ஆயுர்வேத சிகிச்சைக்கு சென்றிருந்த அவர், அது பலனிக்காமால் நேற்று காலமானார். அவரது மறைவுச் செய்தி அறிந்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது இரங்கலை தெரிவித்திருந்தார். 

நடிகை சிம்ரன் 

பவதாரிணியின் மறைவால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். இக்கட்டான நேரத்தில் இளையராஜாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

இசைஞானி இளையராஜா அவர்களின் அன்பு மகள்  பின்னணி பாடகி சகோதரி பவதாரணி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும். அவருடைய மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல். பவதாரணியை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா சார், சகோதரர்கள் கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தார் - நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் சிலம்பரசன் 

உங்களின் அப்பாவித்தனத்திற்காகவும், அன்பிற்காகவும் மக்கள் இதயத்தில் என்றும் வாழும் குரல்! நீங்கள் ஒரு தூய ஆன்மாவாக இருந்தீர்கள்! சீக்கிரம் சென்றுவிட்டார்! இந்த தருணத்தில் இளையராஜா சார் மற்றும் எனது சகோதரரின் யுவன் குடும்பத்தினருக்கு வலிமை அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். நிம்மதியாக இருங்கள் பவதாரிணி. 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் 

பவதாரிணியின் மரண செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், சோகமும் அடைந்தேன். இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜாவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். 

நடிகை ஷனம் ஷெட்டி 

தேவதை குரல் கொண்ட பெண் சீக்கிரம் சென்று விட்டாள். இளையராஜா குடும்பத்தினருக்கும், பவதாரிணி ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

நடிகை வனிதா விஜயகுமார்

பவதாரினி நீ என் தோழி அல்ல.. நீ சகோதரி அல்ல.. நீ யார் என்று உனக்கு தெரியும்... நமக்கான உறவு குறித்து என்றென்றும் பகிர்ந்துகொண்டு ஒரு நாள் சந்திப்போம்... என் அன்பை ஜீவா அம்மாவுக்குக் கொடுங்கள், நான் அவரை எப்போதும் தவறவிடுகிறேன். நீ எப்பொழுதும் கடவுளின் குழந்தை .. மரண செய்தி கேட்டு நான் உடைந்து நொறுங்கி போய்விட்டேன், என்ன சொல்வது என்று தெரியவில்லை. நீ என் முதல் பாடலைப் பாடினாய் இன்னும் பல .. நாம் பகிர்ந்து கொள்ளும் சிறுவயது உறவு நான் உன்னை மீண்டும் சந்திக்கும் வரை என்னை வேட்டையாடும்.  நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget