தீபாவளி வேண்டாம்னு சொன்னா.. வேணும்னா காவித்துண்டு போடுங்க - ஆனந்த்ராஜ் பரபர!
இப்போ உங்களை தீபாவளி கொண்டாடாத, பொங்கல் கொண்டாடாதன்னு சொன்னா கொண்டாடாம இருப்பீர்களா? அது போல அது அவர்களது உரிமை.
தமிழ் சினிமாவும் 90 களின் பயங்கர வில்லன் நடிகர் நானும் ரவுடிதான் திரைப்படத்துக்கு பிறகு காமெடி வில்லனாக மாற்றப்பட்டு இரண்டாவது ரவுண்டு வந்துகொண்டிருக்கும் நடிகர் ஆனந்த்ராஜ், சென்னையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அதிரடியாக பதில் கலை சொன்ன அவர், ஜெயலலிதா இருந்த காலத்தில் இருந்தே அதிமுக அபிமானியாக இருந்தவர். பின்னர், ஒபிஎஸ், ஈபிஎஸ்-க்கு எதிராகவும் கருத்துகள் சொல்லி இருக்கிறார். வாக்களிக்க வந்த அவர் ஹிஜாப் பிரச்சனை குறித்தும், நடிகர்கள் பலர் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களிக்க வராததை குறித்தும் தனது கருத்தை பதிவு செய்தார். மதுரையில் வாக்குச்சாவடி ஹிஜாப் பிரச்சனை குறித்து பாஜகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதில் சொல்லி இருக்கிறார்.
ஹிஜாப் அணிந்து ஒட்டு போட வந்த பெண்களை அனுமதிக்காமல் பாஜகவினர் பிரச்னை செய்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்புகையில், "காவி துண்டு போட்டுக்கிட்டு வாங்கன்னு உங்களை சொன்னா போட்டுக்கோங்க, ஆனா அவங்கள போட கூடாதுன்னு சொல்றது தப்பு. அது அவங்களோட உரிமை, இப்போ உங்களை தீபாவளி கொண்டாடாத, பொங்கல் கொண்டாடாதன்னு சொன்னா கொண்டாடாம இருப்பீர்களா? அது போல அது அவர்களது உரிமை. ஜல்லிகட்டுக்காக போராடினோம், எதுக்காக போராடினோம். அது ஒரு கலை, இது ஒரு கலாச்சாரம். உலக நாடுகள் முழுக்க போடுறாங்க, இப்ப திடீர்ன்னு போடக்கூடாதுன்னு சொல்றது தப்பு. இதனை மிகவும் மென்மையாக கையாள வேண்டும், கர்நாடக அரசும் சரி, பல்வேறு அரசாங்கங்களும் சரி, இந்த பிரச்சனையை மிகவும் மென்மையாக கையாள வேண்டும். ஏனென்றால் இது அவ்வளவு சென்சிடிவான பிரச்னை. ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு ஆச்சரியமாக இருந்தது, நான் அப்படி ஒரு வாதத்தை எதிர்பார்க்கவில்லை. ஹிஜாப் அணிவது அவர்களது விருப்பம், அதில் கலாச்சாரமும் வருகிறது." என்று பேசினார்.
அஜித் ரஜினி போன்ற திரைத்துறையினர் பலர் உள்ளாட்சி தேர்தலுக்கு ஒட்டுப்போட வருவதில்லையே இதனை முக்கியமாக நினைக்காததுதான் காரணமா என்று கேட்ட கேள்விக்கு, "என் குடும்பத்திற்கான கேள்வி இது, கண்டிப்பாக அனைவரும் இந்த தேர்தலை முக்கியமாக கருத வேண்டும். நாடாளுமன்ற தேர்தலிலோ, சட்டமன்ற தேர்தலிலோ நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த எம்எல்ஏ, மினிஸ்டர்கள் யாராக இருந்தாலும் இனிமேல், நாம் இவர்கள் மூலமாகத்தான் அணுக வேண்டும். தெருவில் விளக்கு எறியவில்லை என்றால், ஏரியாவில் தண்ணீர் வரவில்லை என்றால் இவர்களிடம்தான் செல்ல வேண்டும். இல்லை எனக்கு மினிஸ்டரை தெரியும் என்றால், அவரும் அந்த வேலையை செய்ய இவரிடம்தான் சொல்ல வேண்டும். அதனால் இந்த தேர்தலை எளிதாக எண்ணிவிடாதீர்கள்." என்று பதிலளித்தார்.