மேலும் அறிய

''தற்கொலை முயற்சிகளில் தோற்றவள் நான்..'' கடந்தகாலம் குறித்து ஓபனாக பேசிய தீபிகா படுகோனே!

நான் பலமுறை தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். ஆனால் அதிலெல்லாம் நான் தோற்றுதான் போனேன். நானெல்லாம் என்றோ செத்திருக்க வேண்டும் என பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஓபனாக பேசியுள்ளார் .

நான் பலமுறை தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். ஆனால் அதிலெல்லாம் நான் தோற்றுதான் போனேன். நானெல்லாம் என்றோ செத்திருக்க வேண்டும் என பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஓபனாக பேசியுள்ளார் . 

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துள்ளார்.  சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ள தீபிகாவின் பேச்சு அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. 

மனச்சோர்வுக்கான போராட்டத்தினை பற்றி பேசிய அவர். தனது கடந்த காலத்தினை பகிர்ந்து கொண்ட பிறகு,  மனநலம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக லைவ் லவ் லாஃப் அறக்கட்டளையை திறந்து வைத்தார். பல சந்தர்ப்பங்களில், இவர் தனது மனநலம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.  ஆனால் சமீபத்திய பேச்சு மிகவும் கவனத்தினைப் பெறும் வகையில் உள்ளது. அவர் பேசியதாவது,  சமீபத்தில், ஒரு நிகழ்வில், தீபிகா மனச்சோர்வுடன் போராடும் போது 'சில நேரங்களில் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்' எனத் தெரிவித்தார். இதுபோன்ற சமயங்களில்  தீபிகா தனது தாயார் உஜ்ஜலா, தீபிகா படுகோனுக்கு மனச்சோர்வில் இருந்து மீண்டு வர   உதவியதாக கூறியுள்ளார். இதற்கிடையில், மனச்சோர்வுடனான தனது போரைப் பற்றி பேசிய தீபிகா, "எந்த காரணமும் இல்லாமல் நான் உடைந்து போவேன்.

நான் படுக்கையில்  எழுந்திருக்க விரும்பாத நாட்கள் இருந்தன, தூக்கம் ஒரு தப்பிக்கும்  வழி என்பதால் நான் தூங்குவேன். நான் சில சமயங்களில் தற்கொலை செய்துகொள்ள முயன்றிருக்கிறேன். என் பெற்றோர் பெங்களூரில் வசிக்கிறார்கள், அதனால் அவர்கள் என்னைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், இதற்கு முன்னரும் இப்போதும் அவர்கள் என்னைச் சந்திக்கும் போதும், எல்லாம் சரியாக இருக்கிறது என்று நான் எப்போதும் தைரியமாக சொல்கிறேன். நீங்கள் எப்போதும் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்பதை உணர வையுங்கள்” என தீபிகா பேசியுள்ளார். இவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார் என அவர் கூறுவதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)

மேலும்,கர்நாடகாவை பூர்விகமாகக் கொண்ட தீபிகா படுகோன் 2007-ஆம் ஆண்டு வெளியான ’ஓம் சாந்தி ஓம்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தன் முதல் படத்திலேயே பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் அறிமுகமான தீபிகா படுகோன் 15 ஆண்டுகளாக பாலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.  

சஞ்சய் லீலா பன்சாலியின் ’ராம்லீலா’ படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்த இவர்களது கெமிஸ்ட்ரி, ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகத்தையும் ரசிகர்களையும் அதிர வைத்தது. படப்பிடிப்பின்போதே காதல் வயப்பட்ட இருவரும் தொடர்ந்து பன்சாலியில், பாஜிராவ் மஸ்தானி, பத்மாவதி ஆகிய படங்களில் நடித்தனர்.

2018ஆம் ஆண்டு திருமணம் செய்த இந்த ஜோடியை ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகும் வாழ்த்தி மகிழ்ந்தது. தற்போது இவர்கள் திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

குதூகலமான தம்பதி:

ரன்வீர் சிங், தீபிகா படுகோனே தம்பதி, எப்போதுமே கலகலப்பான தம்பதி. இன்ஸ்டாவிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்கள். பத்திரிகை பேட்டிகளுக்கு இருவருமே சற்றும் சலித்துக் கொண்டது இல்லை. அப்படித்தான் அண்மையில், எப்போது குழந்தை பெற திட்டமிட்டுள்ளீர்கள் என சமீபத்தில் பத்திரிகையாளர்கள் ரன்வீரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த ரன்வீர், "தீபிகா கான்ஸ் விழா முடிந்து திரும்பியதும் அவரிடமே இதைக் கேளுங்கள்" என தன் வழக்கமான குறும்புடன் தெரிவித்துள்ளார். மேலும் தான் தங்களது வருங்கால குழந்தையின் பெயர் பற்றி தீபிகாவுடன் அடிக்கடி கலந்தாலோசித்து வருவதாகவும் ரன்வீர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்
சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்
‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
இந்தியன் 3 மட்டுமே ஒரே நம்பிக்கை! மீண்டும் களமிறங்கும் கமல், ஷங்கர், லைகா.. என்ன காரணம்?
இந்தியன் 3 மட்டுமே ஒரே நம்பிக்கை! மீண்டும் களமிறங்கும் கமல், ஷங்கர், லைகா.. என்ன காரணம்?
கேட்க ஆள் இல்லைன்னு இஷ்டத்துக்கு ஆடுறாங்க.. நடிகர்கள், இயக்குநர்களை சாடிய திருப்பூர் சுப்பிரமணியன்!
கேட்க ஆள் இல்லைன்னு இஷ்டத்துக்கு ஆடுறாங்க.. நடிகர்கள், இயக்குநர்களை சாடிய திருப்பூர் சுப்பிரமணியன்!

வீடியோ

Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
Embed widget