Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
நடிகர் சூர்யா நடிப்பில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ஆண்டில் 3வது திரைப்படம் ரிலீசாகிறது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள தீபாவளி வெளியீடாக வர உள்ள திரைப்படம் சீன்.
தீபாவளி விருந்தாக சீன்:
நீண்ட காலமாக பெரியளவில் வெற்றிப் படங்கள் அளிக்க முடியாமல் தடுமாறி வந்த சூர்யாவிற்கு இந்தாண்டு இனிப்பான ஆண்டாக அமைந்துள்ளது. இந்தாண்டு அவரது நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம். இந்த படத்தைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான விஸ்வநாத் அன் சன்ஸ் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த நிலையில், நடிகர் சூர்யா நடிப்பில் சீன் படம் வரும் 6ம் தேதி வெளியாகிறது. சூர்யாவின் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நடப்பாண்டில் வெளியாகும் சூர்யாவின் 3வது திரைப்படம் இதுவாகும்.
11 ஆண்டுகளுக்கு பிறகு 3வது படம்:
இதற்கு முன்பு 2005ம் ஆண்டு சூர்யா நடிப்பில் 3 படங்கள் ஒரே ஆண்டு வெளியானது. அதன்பின்பு, தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ஆண்டில் சூர்யாவின் 3வது படம் வெளியாகிறது. கடைசியாக 2005ம் ஆண்டு சூர்யா நடிப்பில் மாயாவி, கஜினி மற்றும் ஆறு படங்கள் வெளியானது. இந்த 3 படங்களிலும் அவரே கதாநாயகனாக நடித்திருப்பார். இந்த 3 படங்களில் மாயாவி தவிர மற்ற 3 படங்களும் மாபெரு் வெற்றி பெற்ற படங்கள் ஆகும்.
அதன்பிறகு அவர் 2010ம் ஆண்டு 3 படங்கள் நடித்தார். அந்தாண்டு சிங்கம், ரத்த சரித்திரம் ஆகிய 2 படங்களில் அவர் கதாநாயகனாக நடிக்க மன்மதன் அம்பு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு சிறப்புத் தோற்றத்தில் நடனமாடியிருப்பார். அதற்கு அடுத்தாண்டும் அவர் 3 படங்களில் நடித்திருப்பார். ஆனால், அந்தாண்டும் 7ம் அறிவு படம் தவிர அவன் இவன் மற்றும் கோ படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார்.
ரசிகர்கள் மகிழ்ச்சி:
சூர்யா நடிப்பில் ஒரே ஆண்டில் 3வது படம் வெளியாக இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீது ஜோசப் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் டிஎஸ்பி இன்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.
இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜான்விஜய், ராஜ்ப்ரியன், ஆனந்தராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். அஜ்மல் சபு படத்தொகுப்பு செய்துள்ளார். வினித் அகஸ்டின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சீன் படத்திற்கு போட்டியாக இந்த தீபாவளிக்கு நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2, ராமாயணா ஆகிய படங்கள் வெளியாகிறது. தீபாவளி விருந்தாக பிரபலங்களின் படங்கள் வெளியாவதால் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிய உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















