மேலும் அறிய

sivakarthikeyan | ”சிவகார்த்திகேயன் ஒரு மாயாஜாலக்காரர்.. “ - பிரபல தெலுங்கு இயக்குநர் புகழாரம்!

படம் இருமொழிகளில் உருவாக இருப்பதால் தற்போது தீவிரமாக தெலுங்கு கற்று வருகிறாராம் சிவகார்த்திகேயன்.

கோலிவுட்டின் முன்னணி நாயகன் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. சமீபத்தில் தெலுங்கு இயக்குநர் அனுதீப் மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோருடன் இணைய இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் நேற்று அதனை உறுதிப்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் நடிகர் சிவா. அதில் தயாரிப்பாளர், இயக்குநர் , இசையமைப்பாளர்களை டேக் செய்து அடுத்த படத்திற்காக இணைவது மகிழ்ச்சி என குறிப்பிட்டிருந்தார்.


அனுதீப் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாக உள்ள இந்த  திரைப்படம் சிவகார்த்திகேயனின் 20 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படத்தை SK20 என அழைக்கின்றனர். ஜாதி ரத்தாலு என்னும்  தெலுங்கு திரைப்படம் மூலமாக பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தவர் இயக்குநர் அனுதீப். தற்போது உருவாக உள்ள இந்த திரைப்படம் தமிழ் , தெலுங்கு என இருமொழிகளில் பை - லிங்குவல் திரைப்படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தில் ரிது வர்மா கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இரண்டாம் பாதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் படத்தை தயாரிக்கிறது. 

இந்நிலையில் இயக்குநர் அனுதீப் , “சிவகார்த்திகேயனை நான் எப்போதும் ஒரு நடிகராக விட மேஜிஷியனாகத்தான் பார்த்திருக்கிறேன். அனைத்து தரப்பு பார்வையாளர்களையும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் குடும்பங்களைச் சேர்ந்த பார்வையாளர்களை ஈர்க்கும் அவரது திறமை தமிழ்நாட்டை தாண்டி அவருக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளது.

இந்த படம் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் விருந்தாக அமையும்” என தெரிவித்துள்ளார். இந்த செய்தி சிவகார்த்திகேயன்  ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. படம் இருமொழிகளில் உருவாக இருப்பதால் தற்போது தீவிரமாக தெலுங்கு கற்று வருகிறாராம் சிவகார்த்திகேயன். படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டை விரைவில் எதிர்பார்க்கலாம். இது தவிர பிக்பாஸ் இயக்குநர் ஒருவரின் படைப்பில் , கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படத்திலும் சிவா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Box Office Prediction : இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Embed widget