மேலும் அறிய

”நீ உயிரோட இல்லன்னு ஏத்துக்க முடியல.. உன்னை உடைச்சுட்டேன்” - யாஷிகா

தன் தோழி விபத்தில் இறந்ததை குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்ட யாஷிகா ஆனந்த்.

அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த பவானி தன் தோழியான நடிகை யாஷிகாவை பார்க்க கடந்த ஜூலை மாதம் சென்னைக்கு வந்தார். யாஷிகாவின் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் ஜூலை 24ம் தேதி யாஷிகா, பவானி மற்றும் இரண்டு பேர் டின்னருக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பினார்கள். கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கார் விபத்துக்குள்ளானதில் பவானி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. விபத்து நடந்த இடத்திலேயே பவானி உயிரிழந்ததை உறவினர்கள் யாஷிகா கண்விழித்ததும் தெரிவிக்க வில்லை. மருத்துவமனையில் சுயநினைவு திரும்பியதும் ‘பவணி எப்படியிருக்கிறாள்?’ என தன்னுடைய தோழியைப் பற்றி விசாரித்ததாகவும், மருத்துவர்கள் தற்போது தோழியின் மரணம் குறித்து யாஷிகாவிற்கு தெரியப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியதால், பவணி வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியிருந்தார்கள். சில நாட்களுக்கு பிறகுதான் அவருக்கு அந்த செய்தி சொல்லப்பட்டது.

”நீ உயிரோட இல்லன்னு ஏத்துக்க முடியல.. உன்னை உடைச்சுட்டேன்” - யாஷிகா

மேலும் தன் தோழி பவானியின் புகைப்படங்கள், வீடியோவையும் வெளியிட்டு செய்தார். பவானி இல்லாமல் தான் உயிர் வாழ்வதே கொடுமையாக இருக்கிறது என்றார். இந்நிலையில் தான் பவானியுடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு யாஷிகா கூறியிருப்பதாவது, ”என்னுடைய பெரிய நலன்விரும்பி மற்றும் எனது Soul Sister. ஐ மிஸ் யூ. உன்னை நினைக்காமல் ஒரு நாள் கூட கடத்ததில்லை. மீண்டும் அந்த நேரத்திற்கு சென்று நடந்ததை மாற்ற முடியுமா என நினைக்கிறேன். உன்னை அந்த அளவுக்கு மிஸ் செய்கிறேன்.

எங்களை விட்டு செல்லும் முன்பு நீ கொடுத்துவிட்டு சென்ற நியாபகங்கள்.. அவற்றிற்காக நான் நன்றி கடனை பட்டிருக்கிறேன். நீ இப்போது ஒரு ஏன்ஜல். நீ ஒரு மாணிக்கம், உன்னை நான் உடைத்துவிட்டேன். உன்னையும் நம் நியாபகங்களையும் நான் மிஸ் செய்கிறேன்.

நீ இப்போது இங்கு இல்லை என்பதை என் மனம் ஏற்க மறுக்கிறது. நீ என்னிடம் உணவு, டெசர்ட் பற்றி பேசுவதை நான் மிஸ் செய்கிறேன், உனக்கு மேக்கப் செய்து விடுவதையும் நான் மிஸ் செய்கிறேன். இப்படி அனைத்தையும் மிஸ் செய்கிறேன். நீ நல்ல இடத்தில் இருப்பாய் என நம்புகிறேன், உன்னை விரைவில் வந்து சந்திக்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.

”நீ உயிரோட இல்லன்னு ஏத்துக்க முடியல.. உன்னை உடைச்சுட்டேன்” - யாஷிகா

இன்னும் 5 மாதங்களுக்கு தன்னால் நடக்க முடியாது என்றும், படுத்த படுக்கையாகத் தான் இருக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் தெரிவித்தார் யாஷிகா. இதனிடையே யாஷிகா எஸ். ஜே. சூர்யாவுடன் நடித்த 'கடமையை செய்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Embed widget