Srikanth Confession: போதை பழக்கம் ஏற்பட்டது எப்படி? யார் காரணம்.. நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் !
நடிகர் ஸ்ரீகாந்த் போலீசார் விசாரணையில் இதுவரை வெளிவராத பல தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த் யாருடைய சிபாரிசு இன்றி, கடினமாக உழைத்து சினிமாவில் ஹீரோவாக மாறியவர். இவர் உழைப்புக்கு முதல் படமே கை மேல் பலன் கொடுத்தது. இயக்குனர் சசி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடித்த, 'ரோஜா' கூட்டம் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு.... தமிழ் ரசிகர்கள் மத்தியிலும், இவருக்கென தனி இடத்தை பெற்று தந்தது.
நடிகர் என்பதை தாண்டி, தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் போட்டு இவர் தயாரித்த 'நம்பியார்' திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்தின் தோல்விக்கு பின்னர், ஸ்ரீகாந்த் நடித்த பல படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தினசரி, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், ஆகிய படங்களும் தோல்வி அடைந்தன.

இந்த நிலையில் தான் நடிகர் ஸ்ரீகாந்த் இப்போது புது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது, பிரசாத் என்கிற அதிமுக நிர்வாகி, நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் பிரச்சனை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், ஸ்ரீகாந்துக்காக பிரதீப் என்பவரிடம், பிரசாத் கொக்கேன் போதை மருந்தை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து நடிகர் ஸ்ரீகாந்த்திடம் விசாரணை செய்யப்பட்ட நிலையில், ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தினாரா? இல்லையா? என்பதை அறிய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. அதில் நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. அவரைப் போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர், சிறையில் அடைக்கப்பட்ட ஸ்ரீகாந்திடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது, பல்வேறு தகவல்களை தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் கைது ஆனதுக்கு முன்புதான் அவரிடம் இருந்து 250 கிராம் கொக்கேன் பாக்கெட்டை வாங்கினேன். அதை வைத்து கடந்த சனிக்கிழமை இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில், கொக்கேன் பார்ட்டி நடத்தினேன். போதை மருந்து தொடர்பாக பிரசாத்தை மட்டுமே எனக்குத் தெரியும். அவர் என்னை வைத்து படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.
எனக்கு அவர் தர வேண்டிய ரூபாய் பத்து லட்சம் பணத்தை கேட்டபோது, கொக்கேன் கொடுத்து பழக வைத்தார். நான் பணம் கேட்கும் போதெல்லாம், கொக்கேன் கொடுத்து பழக்கத்தை அதிகப்படுத்தியதும் அவர்தான். என்று தனது வாக்குமூலத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். மேலும் தற்போது போலீசார் ஸ்ரீகாந்த் வைத்த கொக்கேன் பார்ட்டியில் கலந்து கொண்ட பிரபலங்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் யார் யார் என்பது பற்றிய விசாரணையை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.





















