சந்தையில் பெரும்பாலும் ப்ராய்லர் முட்டைகள் கிடைக்கின்றன. இவை வெண்மையாக இருக்கும்.

சற்று பிரவுன் நிறத்தில் இருக்கும் முட்டைகளை நாட்டுக்கோழி முட்டைகள் என்று கூறுவார்கள். இவை குறைவாகவே கிடைக்கும்.

சரி, ப்ராய்லர் முட்டைக்கும், நாட்டுக்கோழி முட்டைக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

நாட்டுக்கோழிகள் இந்த முட்டைகளை இடும். இவை வெளிர் பழுப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

இவை கலப்பின கோழிகளிடமிருந்து வருகின்றன. இவை வெள்ளை நிறத்தில் இருக்கும். சந்தையில் இவை ஏராளமாக கிடைக்கும்.

நாட்டுக்கோழி முட்டைகள் ப்ராய்லர் முட்டைகளை விட சிறியதாக இருக்கும்.

வெள்ளை முட்டைகளில் புரதம் உள்ளது. நுண்ணூட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளன.

நாட்டுக்கோழி முட்டையில் ஒமேகா 3, விட்டமின் ஏ, ஈ ஆகியவை அதிகமாக உள்ளன. புரதமும் நன்றாக உள்ளது.

பராய்லர் முட்டை விலை குறைவு. நாட்டுக்கோழி முட்டை விலை சற்று அதிகம்.

ப்ராய்லர் முட்டைகளை விட நாட்டுக்கோழி முட்டைகள் சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.