Anitha Sampath : "பேசும் படம்” : புது வீட்டில் குடியேறிய பிக்பாஸ் செல்லம்.. இன்ஸ்டாவில் அனிதா குவிக்கும் மகிழ்ச்சி மேனியா..
"வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிக பெரிய கனவு.வாடகை வீட்டிலயே நல்ல வீடு கிடைக்காதா..பெட்ரூம் வச்ச வீட்டுக்கு போக மாட்டோமானு ஏங்குன காலம் எல்லாம் இருக்கு.."
செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பேமஸ் ஆனார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. செய்தி வாசிப்பாளரான இவர் செய்தி வாசிப்பாளராகவே சில படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் சூர்யா நடித்த காப்பான், விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிதா, தற்போது பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில்கூட விமல், பால சரவணன் உடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்ட அனிதா சம்பத், கெட்ட வார்த்தை பேசியது, சிம்புவை விமர்சித்தது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இருந்தாலும், பிக்பாஸ் வீட்டின் செல்லமாகத்தான் கருதப்பட்டார்.
View this post on Instagram
இந்நிலையில், இவர் தற்போது தான் புதிதாக வீடு ஒன்றை வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். புதுவீடு கிரஹப்பிரவேசத்தின் போது கணவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இந்த மகிழ்ச்சியான செய்தியை சொல்லி உள்ளார் அனிதா. தங்களின் சொந்த வீடு வாங்கும் கனவு தற்போது நிறைவேறியுள்ளதாக கூறி, கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் கமெண்ட்டுகள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "Finally! வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிக பெரிய கனவு.வாடகை வீட்டுலயே நல்ல வீடு கிடைக்காதா..பெட்ரூம் வச்ச வீட்டுக்கு போக மாட்டோமானு ஏங்குன காலம் எல்லாம் இருக்கு..ஓட்டு வீடுல பிறந்து வளர்ந்த பிரபாக்கும் அதே தான். இன்னைக்கி எங்களுக்கு பிடிச்ச மாதிரி எங்களுக்காக ஒரு வீடு. நிறைய வலிகளும் நிறைய உழைப்பும் நிறைய மெனக்கெடல்களும் கடந்து அன்னையர் தினம் அன்று எங்கள் அன்னையர்களுக்காக அவர்களின் சொந்த வீட்டு கனவை நினைவாக்கி விட்டோம். நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும்”. இப்ப அதை இன்னும் வலிமையா நம்புறேன்." என்று இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.