மேலும் அறிய

Kalaimamani Award: “தகுதியானவர்களுக்கே கலைமாமணி விருது? குழுவை மாற்றியமைக்கலாம்” - உயர்நீதிமன்ற மதுரைகிளை அதிரடி

தேவையிருப்பின் கலைமாமணி விருது குழுவை மாற்றி அமைக்கலாம் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

நெல்லையை சேர்ந்த சமுத்திரம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில் 2019-2020ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது. அப்போது தகுதியில்லாத பலருக்கு விருது வழங்கப்பட்டதோடு, அதற்கான சான்றிதழில் உறுப்பினர், செயலர் உள்ளிட்டோரின் கையொப்பம் கூட இன்றி அவசர கதியில் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியில்லாத நபர்களுக்கு  வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார்.

நீதிபதிகள் காட்டம்:

அந்த மனு விசாரணைக்கு வந்த போது, கலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? எவ்வாறு நபர்களை தேர்வு செய்கிறீர்கள்? என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது எனவும்,  கலை பற்றி தெரியாதவர்களுக்கு எல்லாம் கலைமாமணி விருது வழங்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர். சாதனைகள் படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய விருது தற்போது 2 படங்களில் நடித்தவர்களுக்கு எல்லாம் வழங்கப்படுகிறது எனவும் சாடினார். தற்போதைய நிலையே நீடித்தால் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தை கலைக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.  2021ம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்தும், அடுத்து வழங்கப்பட உள்ள கலைமாமணி விருதுகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுலா & கலைத்துறை செயலாளர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அரசு தரப்பு விளக்கம்:

இதையடுத்து, 2019-20ம் ஆண்டில் தகுதியான நபர்களுக்கு தான் விருதுகள் வழங்கப்பட்டனவா என்பது குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

தீர்ப்பு வெளியீடு:

இந்நிலையில் நீதிபதிகள் மகாதேவன், மற்றும் சத்திய நாரயண பிரசாத் ஆகியோர் சேர்ந்து தீர்ப்பை வெளியிட்டனர். அதில், 2019-2020ம் ஆண்டில்  தகுதியானவர்களுக்கு தான்  கலைமாமணி விருது  வழங்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக ஆய்வு செய்ய வேண்டியிருப்பின் தேர்வுக்குழுவை மாற்றியமைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டதோடு,  தேவை இருப்பின் விருதுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு  சமமான வாய்ப்பு வழங்கவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முடித்து வைத்தது.

கலைமாமணி விருது:

இயல், இசை, நாடக மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு,  தமிழ்நாடு அரசு  கலைமாமணி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு "கலை இளமணி”, 19 முதல் 35 வயது வரையிலான நபர்களுக்கு “கலை வளர்மதி”, 36 முதல் 50 வயது வரையினாவர்களுக்கு “கலை சுடர்மணி”, 51 முதல் 60 வயது வரையிலான நபர்களுக்கு  “கலை நன்மணி” மற்றும் 61 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு “கலை முதுமணி” என, 5 பிரிவுகளின் கீழ் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. கலைமாமணி விருது வழங்குவதற்கு என வயது வரம்பு, தகுதி மற்றும்  நெறிமுறை என எதுவும்  இதுவரை வகுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
Embed widget