மேலும் அறிய

Healthy Drinks: காலையில் வெறும் வயிற்றில் என்னென்ன குடிக்கலாம் தெரியுமா..? வெயிலுக்கு இதை ட்ரை பண்ணுங்க..!

கொளுத்தும் கோடை வெயில் காலத்தில் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள கூடிய எளிமையான ஆனால் ஆரோக்கியமான பானங்கள்.

இந்த கொளுத்தும் வெயில்காலத்தில் குடல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் உடலில் உள்ள நீரை இழந்து டிஹைட்ரேஷன் பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அந்த சமயத்தில் கூல் ட்ரிங்க்ஸ் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிடுவதை காட்டிலும் உடலுக்கு ஏற்ற ஒரு பானத்தை பருகுவது உகந்ததாகும். 

Healthy Drinks: காலையில் வெறும் வயிற்றில் என்னென்ன குடிக்கலாம் தெரியுமா..? வெயிலுக்கு இதை ட்ரை பண்ணுங்க..!

கோடை காலம் வந்தாலே, கடுமையான வெப்பத்தால் பசியின்மை மற்றும் செரிமான கோளாறுகள் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இந்த வெயில் காலத்தில் வரும் பெரும்பாலான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது உடலுக்கு தேவையான நீரோட்டம் இல்லாததும், உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைக்க போதுமான அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்காதது தான்.

குளுமையான மற்றும் சர்க்கரை கலந்த பானைகளை எடுத்துக் கொள்வதை காட்டிலும்  மோர், தயிர், புதினா, சியா விதைகள், பெருஞ்சீரகம் போன்றவை அற்புதமான பலன்களை வழங்கக்கூடிய குளிர்ச்சியான உணவுகளாகக் கருதப்படுகின்றன. கூல் ட்ரிங்க்ஸ் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை நீங்கள் விரும்பி எடுத்துக்கொள்வதால் உங்கள் உடலுக்கு எந்த வகையிலும் அது உபயோமாக இருக்காது. 

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்காக காலையில் வெறும் வயிற்றில்  நீங்கள் எடுத்து கொள்ள கூடிய எளிய பானங்கள் சில :

எலுமிச்சை நீர் மற்றும் சியா விதைகள்:

1 டீஸ்பூன் சியா விதைகளை ¼ கிளாஸ் தண்ணீரில் முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் காலை அதில் 1 எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து 150 மில்லி தண்ணீர் சேர்த்து எடுத்து கொள்ளலாம். இது உடலை நீரேற்றமாகவும், சீரான இயக்கத்தையும் செரிமான மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைத்து இருக்க உதவும். 

Healthy Drinks: காலையில் வெறும் வயிற்றில் என்னென்ன குடிக்கலாம் தெரியுமா..? வெயிலுக்கு இதை ட்ரை பண்ணுங்க..!

வெள்ளரி சாறு :

குளிர்ந்த வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் 4-5 புதினா இலைகளை நறுக்கி, ஒரு சிட்டிகை சாட் மசாலா அல்லது காலா நமக் சேர்த்து, 1 டீஸ்பூன் துருவிய மாங்காய் சேர்த்து உட்கொள்வதால் உடலை குளிர்ச்சியாக்கி, வயிறை லேசாக்குகிறது. 

தண்ணீர் :

தண்ணீர் தான் முதன்மையானது, கோடை காலத்தில் இன்னும் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் இரவு உறங்கும் போது வறண்ட உங்கள் தோலுக்கு நீரேற்றம் கொடுக்கிறது.

தயிர்

½ கப் தயிர் மற்றும் ஒரு சிறிய துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை ஹல்டி மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். மறுநாள் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இதை பருகுவதால் உடலுக்கு தேவையான லாக்டோபாகில்லியை வழங்குகிறது.  

கோடை காலத்தில் எளிதாக பரவக்கூடிய தொற்று நோய்களை தடுக்க ஆரோக்கியமான செரிமான அமைப்பை சீராக வைத்திருப்பது முக்கியம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs Australia LIVE SCORE: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா.. பந்து வீச்சு தேர்வு! அதிரடி பேட்டிங்கை தொடங்குமா இந்தியா?

அப்துல் கலாம், தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்  - தமிழ் வளர்ச்சித் துறை

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs Australia LIVE SCORE: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா.. பந்து வீச்சு தேர்வு! அதிரடி பேட்டிங்கை தொடங்குமா இந்தியா?
India vs Australia LIVE SCORE: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா.. பந்து வீச்சு தேர்வு! அதிரடி பேட்டிங்கை தொடங்குமா இந்தியா?
அப்துல் கலாம், தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்  - தமிழ் வளர்ச்சித் துறை
அப்துல் கலாம், தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!

'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி

Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு

Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்

Embed widget