ஹன்சிகா வீட்டில் விவகரத்தா..? இப்போதான கல்யாணம் முடிஞ்சுது! - குழப்பத்தில் ரசிகர்கள்!
பிரசாந்துடன் நடந்த திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்கியதும் பெரும் கேள்வியையும் குழப்பத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது.
நடிகை ஹன்சிகாவின், அண்ணனுக்கு திருமணமாகி ஒருவருடம் முடிந்த நிலையில், அவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்தாகியுள்ளது என சில தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது.
ஹன்சிகா மோத்வானியின் சகோதரர், பிரசாந்த மோத்வானி, முஸ்கான் நான்சி என்பவரிடம், 2020 ஆம் ஆண்டு காதலை வெளிபடுத்தி கடந்த ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி மணந்துள்ளார். தற்போது, இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக பல தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது. சம்மந்தப்பட்ட இந்த இருவரும் அதிகாரபூர்வமாக எந்தவொரு விஷயத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த ஹன்சிகாவின் திருமண நிகழ்ச்சியில் நடிகை முஸ்கான் நான்சி கொள்ளாததும், பிரசாந்துடன் நடந்த திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்கயதும் பெரும் கேள்வியையும் குழப்பத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் நவம்பர் 2 ஆம் தேதி, முகபக்கவாதத்தால் முஸ்கான் நான்சி பாதிக்கப்பட்டார். சிதலமடைந்த அவரின் முகத்தின் புகைப்படங்களையும், அதனால் அவர் தினமும் கஷ்டபட்டு வருவதாக அவர் ஷேர் செய்து இருந்தார்.
ஹன்சிகாவின் திருமணம்
View this post on Instagram
ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவுக்கும் சில தினங்களுக்கு முன்னர் மிகவும் பிரமாண்டமாக ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமணம் சடங்குகள், சம்பிரதாயங்கள் என திருமண கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வந்தது.