மேலும் அறிய

Oru Nodi: வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் ஒரு நொடி படம்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஜி. வி. பிரகாஷ்

ஒரு நொடி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசை அசுரனும் திரைப்பட நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் இன்று  வெளியிட்டார்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற முக்கியமான படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார். தயாரிப்பு மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் ‘ஒரு நொடி’ படத்தில் ‘தொட்டால் தொடரும்’ பட நாயகனும் ‘அயோத்தி’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தவருமான தமன் குமார் முற்றிலும் புதிய பாத்திரம் ஒன்றில் நாயகனாக நடிக்க, அவருடன் எம் எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபா ஷங்கர்,  ஸ்ரீரஞ்சனி, குரு சூரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். ஒளிப்பதிவு இயக்குனராக கே .ஜி ரத்தீஷ் பொறுப்பேற்க, கலை இயக்குனர் பணியை  கவனிக்கிறார் எஸ் ஜே ராம். அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கமும் படத்தொகுப்பாளர் எஸ் குரு சூர்யாவும் படத்துக்கு தங்கள் பங்களிப்பை பலமாக செய்திருக்கிறார்கள். 

முதல் படத்திலேயே முத்திரை பதிக்க விரும்பும் இயக்குனர், ஆர்வமும் நேர்மையும் மிக்க புதிய தயாரிப்பாளர், வளர்ந்து வரும் இளம் நடிகர் பட்டாளம் என்று ஆர்வம் மிக்க  இந்தக் கூட்டணி 'ஒரு நொடி' படத்தின் மூலம் திகில் மற்றும் மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் கதை ஒன்றை  புதிய கோணத்தில் சொல்லக் காத்திருக்கிறது. ரசிகர்கள் யூகிக்க முடியாத மர்ம முடிச்சுகள் படத்தின் இன்னொரு பலம்.

'ஒரு நொடி' படத்தின் படப்பிடிப்புகள் முழுமையடைந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் வெகு மும்முரமாக நடந்து வருகின்ற நிலையில், வெகுவிரைவில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க 

Poonam Pandey: “நான் இன்னும் சாகல”..வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே.. அதிர்ந்து போன திரையுலகினர்!

Vijay Vs SA Chandrasekar: தொடங்கிய அரசியல் பயணம்! விஜய் - எஸ்.ஏ. சந்திரசேகர் இடையே நடந்த மோதல்!

LIC Movie: LIC பட ஷூட்டிங்கில் வேலையை காட்டிய நிஃபியா பர்னிச்சர் சிறுவன்.. வைரலாகும் வீடியோ!

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget