Golden Globes 2024: கோல்டன் குளோப் விருதுகளை தட்டித் தூக்கிய கிறிஸ்டோபர் நோலனின் “ஓபன்ஹைமர்” படம்.. முழு பட்டியல் உள்ளே..!
Golden Globes 2024: கோல்டன் குளோப் விருதானது சிறந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
திரைப்பட ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக விருதுகள் வழங்கி அங்கீகரிக்கப்படும் போது கலைப்படைப்புகள் மிகுந்த மதிப்பு பெறும். அந்த வகையில் மாநில அரசு விருதுகள் தொடங்கி தேசிய விருது, ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் உலகளவில் திரைப்படங்கள், வெப் சிரீஸ்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் உலகளவில் சினிமா ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் விருது “கோல்டன் குளோப்” ஆகும்.
இந்த விருதானது சிறந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 81 வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்திய நேரப்படி காலை 6.30 தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பல்வேறு படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு என மொத்தம் 27 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குநர் (மோஷன் பிக்சர்)
பரிந்துரைக்கப்பட்டவர்கள்: பிராட்லி கூப்பர் (Maestro), கிரேட்டா ஜெர்விக் (Barbie), யார்கோஸ் லேந்திமோஸ் (Poor Things), கிறிஸ்டோபர் நோலன்(Oppenheimer), மார்ட்டின் ஸ்கார்சிஸ் (Killers of the Flower Moon), செலின் சங் (Past Lives)
விருது: கிறிஸ்டோபர் நோலன்(Oppenheimer)
பாக்ஸ் ஆபிஸ் சாதனை
பரிந்துரைக்கப்பட்ட படங்கள்: பார்பி, ஜான் விக் சாப்டர் 4, ஓப்பன்ஹெய்மர், கேலக்ஸியன் கார்டியன்ஸ், டெய்லர் ஸ்விஃப்ட்: தி ஈராஸ் டூர், ஸ்பைடர் மேன் - அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ், தி சூப்பர் மேரியோ, மிஷன் இம்பாசிபிள் 7
விருது: பார்பி
சிறந்த நடிகை (இசை அல்லது காமெடி)
பரிந்துரைக்கப்பட்டவர்கள்: ஃபேண்டசியா பாரினோ(The Color Purple), ஜெனிபர் லாரன்ஸ்(No Hard Feelings), நடாலி போர்ட்மேன்(May December), அல்மா போஸ்டி(Fallen Leaves), மார்கோட் ராபி (Barbie), எம்மா ஸ்டோன்(Poor Things)
விருது: எம்மா ஸ்டோன்(Poor Things)
சிறந்த வெளிநாட்டு படம்
பரிந்துரைக்கப்பட்ட படங்கள்: Anatomy of a Fall (பிரான்ஸ்), Fallen Leaves (பின்லாந்து), Io Capitano (இத்தாலி), Past Lives (அமெரிக்கா), Society of the Snow (ஸ்பெயின்), The Zone of Interest (இங்கிலாந்து)
விருது: Anatomy of a Fall
சிறந்த திரைக்கதை
பரிந்துரைக்கப்பட்ட படங்கள்: Barbie (Greta Gerwig, Noah Baumbach), Poor Things (Tony McNamara), Oppenheimer (Christopher Nolan), Killers of the Flower Moon(Eric Roth, Martin Scorsese), Past Lives (Celine Song), Anatomy of a Fall (Justine Triet, Arthur Harari)
விருது: Anatomy of a Fall (Justine Triet, Arthur Harari)
சிறந்த துணை நடிகை
பரிந்துரைக்கப்பட்டவர்கள்: Emily Blunt (Oppenheimer), Danielle Brooks (The Color Purple), Jodie Foster (Nyad), Julianne Moore (May December), Da’Vine Joy Randolph (The Holdovers)
விருது: Da’Vine Joy Randolph (The Holdovers)
சிறந்த துணை நடிகர்
பரிந்துரைக்கப்பட்டவர்கள்: Willem Dafoe (Poor Things), Robert De Niro (Killers of the Flower Moon), Robert Downey Jr.(Oppenheimer), Ryan Gosling (Barbie), Charles Melton (May December), Mark Ruffalo (Poor Things)
விருது: Robert Downey Jr.(Oppenheimer)
சிறந்த நடிகர் (இசை அல்லது காமெடி)
பரிந்துரைக்கப்பட்டவர்கள்: நிகோலஸ் கேஜ் (Dream Scenario), திமோதி சாலமெட் (Wonka), மாட் டாமன் (Air), பால் கியாமட்டி(The Holdovers) ,ஜோவாகின் பீனிக்ஸ் (Beau Is Afraid), ஜெஃப்ரி ரைட் (American Fiction)
விருது: பால் கியாமட்டி(The Holdovers)
பிற விவரங்கள்
- சிறந்த நடிகர்: சில்லியன் மர்ஃபி (Cillian Murphy) - ஓப்பன் ஹைமர் (Oppenheimer)
- சிறந்த நடிகை: லில்லி கிளாட்சன் (Lily Gladstone) - கில்லர்ஸ் ஆஃப் ப்ளவர் மூன் (Killers of the Flower Moon)
- ஒரிஜினல் பின்னணி இசை: லுட்விக் கோரன்சன் (Ludwig Göransson) - ஓப்பன்ஹைமர் (Oppenheimer)
- சிறந்த படம் (இசை அல்லது காமெடி): பூர் திங்ஸ் (Poor Things)
- சிறந்த பாடல்: வாட் வாஸ் ஐ மேட் ஃபார்? (What Was I Made For?)- பில்லி எலிஷ் மற்றும் ஃபின்னியாஸ் (Billie Eilish and Finneas)
- சிறந்த அனிமேஷன் படம்: தி பாய் அண்ட் தி ஹெரோன் (the Boy and the Heron)
தொலைக்காட்சி விருதுகள்
- சிறந்த சீரிஸ் (நாடகம்) - Succession (HBO)
- சிறந்த சீரிஸ் (இசை/காமெடி) - The Bear (FX)
- சிறந்த லிமிடெட் சீரிஸ் அல்லது ஆந்தாலஜி தொடர் அல்லது டிவி திரைப்படம் - Beef (Netflix)
- சிறந்த நடிகை (ட்ராமா) - sarah snook (Succession )
- சிறந்த நடிகர் (ட்ராமா) - Kieran Culkin (Succession)
- சிறந்த நடிகை (இசை/காமெடி) - Ayo Edebiri (The Bear)
- சிறந்த நடிகர் (இசை/காமெடி) - Jeremy Allen White (The Bear)
- சிறந்த நடிகை (சிறந்த லிமிடெட் சீரிஸ் அல்லது ஆந்தாலஜி தொடர் அல்லது டிவி திரைப்படம்) - Ali Wong (Beef)
- சிறந்த நடிகர் (லிமிடெட்/ ஆந்தாலஜி தொடர் அல்லது டிவி திரைப்படம்) - Steven Yeun (Beef)
- சிறந்த துணை நடிகை (ட்ராமா அல்லது இசை/நகைச்சுவை) - Elizabeth Debicki (The Crown)
- சிறந்த துணை நடிகர் (ட்ராமா அல்லது இசை/நகைச்சுவை) - டைலர் ஜேம்ஸ் வில்லியம்ஸ் (Tyler James Williams), அபோட் எலிமெண்டரி
- சிறந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் - Ricky Gervais (Ricky Gervais: Armageddon)