GOAT Movie Collection: கமலின் விக்ரம் பட வசூலை நெருங்கிய தி கோட்...13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் 13 நாள் வசூலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது
தி கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியது. தமிழ், தெலுங்கு ,இந்தி , மலையாளம் , கன்னடம் என உலகம் முழுவதும் கிட்டதட்ட 5000 திரையரங்கங்களில் வெளியாகிய தி கோட் முதல் நாளில் 126 கோடி வசூலித்தது. படம் வெளியாகி 13 நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது படத்தின் வசூல் குறித்த தகவல்களை படக்குழு அதிகாரப்பூர்வாமாக வெளியிட்டுள்ளது.
அதன்படி தி கோட் திரைப்படம் 13 நாட்களில் உலகளவில் ரூ 413 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு விஜய் நடித்த லியோ திரைப்படம் 600 கோடி வசூலித்த நிலையில் தி கோட் திரைப்படம் 500 கோடி வசூலை எட்டுவதே சிரமம்தான் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
#G.O.A.T Verithanamana Run at the BO🔥 #GreatestOfAllTime @actorvijay Sir @vp_offl @aishkalpathi @Ags_production pic.twitter.com/PBpJL8SNIi
— Archana Kalpathi (@archanakalpathi) September 18, 2024
அதிக வசூல் ஈட்டிய படங்களில் தி கோட் திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இரண்டு படத்தில் ரஜினியின் 2.0 மற்றும் ஜெயிலர் திரைப்படம் இடம்பெற்றுள்ள நிலையில் மூன்றாவது இடத்தை லியோ பிடித்துள்ளது . நான்காவது இடத்தில் இருந்த விக்ரம் திரைப்பம் இடம்பெற்றுள்ள நிலையில். தி கோட் இன்னும் சில நாட்களில் விக்ரம் பட வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது
தி கோட் திரைப்படம் உலகளவில் 1000 கோடி , 1500 கோடி வசூலிக்கும் என பல்வேறு தரப்பினர் கூறி வந்தனர். ஆனால் படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்கள் காரணமாகவோ என்னவோ லியோ படத்தின் வசூலை கூட படம் தொடாத நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் விஜய் படத்திற்கு இருக்கும் அதிகப்படியான எதிர்பார்ப்பு இப்படத்திற்கு இருந்தது. அதற்கேற்றபடியே முதல் நாள் வசூலும் அமைந்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் படத்தில் இருந்த சர்ப்ரைஸ் எல்லாம் இணையத்தில் வெளியானதும் திரைக்கதையில் இருந்த பெரிய பெரிய ஓட்டைகளும் தி கோட் படத்திற்கு ரிபீட் ஆடியன்ஸ் கிடைக்காமல் செய்தன.
எப்படி இருந்தாலும் தி கோட் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இப்படம் நல்ல லாபம் என்று தான் சொல்ல வேண்டும் . 400 கோடி செலவில் உருவான தி கோட் ரிலீஸூக்கு முன்பே போட்ட பணத்தை திருப்பி எடுத்துக் கொடுத்தது. தற்போது திரையர்ங்கத்தில் வரும் வசூல் எல்லாம் படக்குழுவினருக்கு போன்ஸ் என்றுதான் சொல்ல வேண்டும் .
தளபதி 69
விஜய் அடுத்தபடியாக தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். எச் வினோத் இப்படத்தை இயக்க அனிருத் இசையமைக்கிறார். கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு சம்பளம் மட்டுமே ரூ 275 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளன.