மேலும் அறிய

Ponniyin Selvan: மிரட்ட வருகிறான் சோழன்.. வெளியானது ‘சோழா சோழா’ பாடலின் கிளிம்ப்ஸ்.. வீடியோ உள்ளே!

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து இராண்டாவது பாடலான   ‘சோழா சோழா’ பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து இராண்டாவது பாடலான   ‘சோழா சோழா’ பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னதாக படத்தில் இருந்து  ‘பொன்னி நதி’  பாடல் வெளியிடப்பட்டு இருந்தது. கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதிய இந்தப்பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்த பாடலான ‘ சோழா சோழா’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப்பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரெய்லரானது சென்னையில் செப் 6ம் தேதியும், ஐதராபாத்தில் 8ம் தேதியும் நடைபெறுகிறது. பாடல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

View this post on Instagram
 
A post shared by Madras Talkies (@madrastalkies)

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னதாக இப்படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கடந்த ஜூலை 8 ஆம் தேதி வெளியிட்டது.

தமிழ்நாடு தாண்டி பிறமொழி ரசிகர்களிடையும் இந்த டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜூலை மாதம் தொடங்கி பொன்னியின் செல்வன் பட அப்டேட்களை தொடர்ந்து வழங்கி படக்குழு மகிழ்வித்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடல் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி வெளியானது. இது தொடர்பான நிகழ்ச்சி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்தது. இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி, ஜெயராம், ஜெயம்ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அதனைத்தொடர்ந்து அதன் மேக்கிங் வீடியோவும் வெளியிடப்பட்டது.

கடந்த ஜூலை 16 ஆம் தேதி தமிழர்களின் பொற்கால வரலாற்றை வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், வல்லுநர்கள் சொல்வது போல ஒரு வீடியோ வெளியானது. இதனையடுத்து சோழர் காலத்தைப் பற்றி பல தகவல்கள் அடங்கிய வீடியோவும், அருண்மொழிவர்மன் எப்படி ராஜராஜ சோழனாக மாறினார் என்பது தொடர்பான தகவல்கள் அடங்கிய வீடியோவும்  முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

2 பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம்  டீசர் வெளியிட்டு விழாவும் அன்றைய தினம் பிரமாண்டமாக சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம் கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இந்நாவலை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன் என்றும், இதனை படமாக்க  3 தடவை முயன்றுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery MartinDurga Stalin Temple Visit : கொட்டும் மழையில் பால்குடம்.. துர்கா ஸ்டாலின் பரவசம்!சீர்காழியில் சிறப்பு தரிசனம்Vikrant Massey: ”இனி நடிக்க மாட்டேன்”  பிரபல நடிகர் பகீர்  மிரட்டலுக்கு பயந்தாரா?Tiruppur Murder : ’’புருஷன் சாவுக்கு நீங்கதான் காரணம்’’மனைவி சரமாரி கேள்வி!திக்குமுக்காடிய அமைச்சர்..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Embed widget