185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!
40.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு சுருண்ட நியூசி.அணி - 186 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கும் இந்திய அணி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் , நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்டது.
185 ரன்களில் சுருண்ட நியூசி.அணி
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஏடன் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 7:30 மணிக்கு முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரர் வில்யங் 9 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரர் டிம் சீபெர்டு 38 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து வீரர் ஒருவர் கூட அரைசதத்தை எட்டாத நிலையில், அதிகபட்சமாக டிம் சீபெர்டு 38 ரன்களும்,பிளேர் டிக்னர் 34 ரன்களையும் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி சுருண்டது.
திறம்பட செயல்பட்டு ரன்களை கட்டுப்படுத்திய பௌலர்கள்!
இந்திய பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுக்களை குவித்தார்.மேலும், 10 ஓவர்களை வீசிய அன்ஷூல் கம்போஜ் 22 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் 9 ஓவர்களை வீசிய குர்னூர் பிரார் 3 விக்கெட்டுகளை எடுத்து நியூசிலாந்தை குறைந்த ரன்களில் சுருட்ட உதவினர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















