மேலும் அறிய

பவர் Play : ‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?

'சுற்றுலாத்துறையை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் பல வெளிநாடுகளுக்கு அரசு பணத்தை செலவழித்து கடந்த ஆட்சியில் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள் சில அதிகாரிகள். பயணத்தின் மூலம் துறைக்கு எந்த நன்மையும் இல்லை’

கடந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்களை விட மாட்டோம் என கர்ஜித்தார் முதல்வர் விஜய். அதனடிப்படையில், பல திமுக அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  குறிப்பாக, முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டு சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், பல துறைகளில் அமைச்சர்களைவிட அதிகாரிகளே பெரும் அளவில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. நமது ’பவர் Play' புலனாய்வு அணியை தொடர்புகொண்ட அரசு துறை ஊழியர்கள் சிலர். இப்படியான குற்றச்சாட்டை நம்மிடையே முன் வைத்திருக்கின்றனர். பவர் Play : ‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?

சுற்றுலாத்துறையில் முறைகேடு ?

குறிப்பாக, தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையில் கடந்த கால திமுக ஆட்சியில் பதவியில் இருந்த முக்கிய அதிகாரிகள், அரசு பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும், தங்களின் சொந்த தேவைக்கு அரசு இயந்திரத்தை பயன்படுதியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதாக கூறி சுற்றுலாச் சென்ற அதிகரிகள்

தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையை உலகத் தரத்தில் உயர்த்தவும், மேம்படுத்துவதாக கூறியும், பல வெளிநாடுகளுக்கு அதிகாரிகள் இன்பச் சுற்றுலா சென்றிருக்கின்றனர். வெளிநாடுகளில் இருப்பதுபோல் தமிழக சுற்றுலாத் தளங்களை வடிவமைப்பதற்காகவும், சுற்றுலா பயணிகள் ஈர்க்கும் உத்திகளை கற்றுக்கொள்ளவும் வெளிநாடுகளுக்கு செல்வதாக கூறிச் சென்ற அதிகாரிகள், அரசு பணத்தை தண்ணீர் மாதிரி இறைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதே காரணத்தை கூறி பல நாடுகளுக்கு பல அதிகாரிகள் விசிட் அடித்திருக்கின்றனர்.

மேம்படுத்தும் முயற்சி துளி கூட இல்லை

அப்படி வெளிநாடுகளுக்கு அரசு பணத்தில் சென்று திரும்பிய அதிகாரிகள், தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையை உலகத் தரத்தில் உயர்த்த ஒரு துளி முயற்சியும் எடுக்கவில்லையென கூறப்படுகிறது. அரசு பணத்தில் தாங்கள் நினைத்த, விரும்பும் நாடுகளுக்கு சென்று அங்கு கொட்டம் அடித்து வந்திருக்கின்றனர். இதனால், விமான டிக்கெட் கட்டணம், உணவு, தங்குமிடம், வாகன செலவு என கோடிக் கணக்கில் சுற்றுலாத்துறையின் பணம் செலவு செய்யப்பட்டு, அந்த துறையின் நிதி நிலமையே திக்குமுக்காடி வரும் அளவிற்கு சென்றிருப்பதாக கூறியிருக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

யார் அந்த அதிகாரிகள் ?

நமக்கு தகவல் தந்த துறையின் ஊழியர்கள். எந்தெந்த அதிகாரிகள் என்னென்ன நாடுகளுக்கு, எத்தனை நாட்கள், எத்தனை முறை சென்றார்கள் என்ற விவரத்தை விரைவில் ஆதாரங்களுடன் தருவதாக உறுதியளித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் கடந்த கால திமுக ஆட்சியில் முக்கிய பதவிகளை வகித்து, வெளிநாடுகளுக்கு சென்ற அதிகாரிகள், செலவு செய்த தொகை எவ்வளவு, அவர்கள் எதற்கெல்லாம் அரசு பணத்தை பயன்படுத்தியுள்ளனர் என்ற பட்டியலை தற்போதைய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா ?

அரசு நிர்வாகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. அந்த துறையை கெட்டுக் குட்டிச்சுவராக்கும் இதுபோன்ற சில ஊழல் பெருச்சாளி அதிகாரிகள் மீதும், தயவு தாட்சண்யமின்றி முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் ஊழலற்ற நிர்வாகத்தை அவரால் தர முடியும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஸ்குமாரின் விளக்கம் என்ன ?

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்க சுற்றுலாத்துறை அமைச்சரும் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ராஜேஸ்குமாரின் செல்போனுக்கு தொடர்புகொண்டோம். அதனை எடுத்த அவரது உதவியாளர், அமைச்சர் ஒரு நிகழ்ச்சியில் பிசியாக இருப்பதாகவும், பின்னர் அழைப்பதாகவும் தெரிவித்தார். இந்த செய்தி பிரசுரம் ஆகும் வரை அவர் தரப்பில் இருந்து நமக்கு அழைப்பு ஏதும் வரவில்லை.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "ரூபாய் 30 கோடி தர்றேன்.." குதிரை பேரம் நடத்திய அதிமுக பிரமுகர்! தவெக எம்எல்ஏ பகிரங்க குற்றச்சாட்டு
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!
185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
Kavithai Gopal:
Kavithai Gopal: "அட்ஜஸ்ட்மென்ட் பண்ணு பட வாய்ப்பு தர்றேன்" ஆதாரத்துடன் சிக்கிய கவிதை கோபால்!
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
Embed widget