Palani Temple : பழனி கோயிலில் திரைப்பட நடிகர்கள்.. சமந்தா, காதல் தம்பதி மஞ்சிமா, கெளதம் கார்த்திக் சாமி தரிசனம்..
Gautham Karthik Manjima Mohan Palani Temple Visit: பழனி முருகன் கோவிலில் நேற்று நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில் இன்று தம்பதிகளான கெளதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகன் சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நேற்று வருகை தந்த நடிகை சமந்தா, படிப்பாதை வழியாக 600க்கும் மேற்பட்ட படிகளில் சூடம் ஏற்றி கொண்டு பழனி மலை கோவில் மேலே வந்து , ஆனந்த விநாயகரை வணங்கி விட்டு, பின்னர் ராஜ அலங்காரத்தில் முருகனை சாமி தரிசனம் செய்தார்.
CM Stalin: "என் வழி.. தனி வழி.." ஆக்கப்பூர்வ அரசியல்தான் எங்கள் பாணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போது, சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கபட்டதாகவும் ,தற்போது கடவுளின் அருளோடும், மருத்துவர்களின் ஆலோசனைகளோடு மீண்டு வந்ததாகவும் மேலும் முழுமையாக உடல் நலம் பெற வேண்டி வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக பழனி கோவிலுக்கு வந்த சாமி தரிசனம் செய்த்தாகவும் தெரிவித்தார். கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கபட்டது. அவருடன் 96 திரைப்பட இயக்குநர் சி.பிரேம்குமார் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர்.
இதனை தொடர்ந்து இன்று பழனி முருகன் கோவிலுக்கு சினிமா நடிகர் கௌதம் கார்த்திக் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். கௌதம் கார்த்திக் மனைவியும் சினிமா நடிகையுமான மஞ்சிமா மோகன் உடன் வருகை தந்தார். மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சாமி தரிசனம் செய்ய மலை மீது சென்றனர்.
ஏடிஎம் கொள்ளை சம்பவம்: 3 துணை ஆய்வாளர் உள்பட 6 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்
Valentines Day 2023: "காலமெல்லாம் காதல் வாழ்க”: தமிழில் பார்க்கக்கூடிய டாப் 10 காதல் படங்கள் இதோ..!
மலை மீது சென்ற கௌதம் கார்த்திக்கை பார்த்து பக்தர்கள் பலரும் புகைப்படம் எடுக்க திரண்டனர். இந்த நிலையில் விரைவாக சாமி தரிசனம் செய்ய கௌதம் கார்த்திக் அழைத்து செல்லப்பட்டார். பின்னர் கோவில் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட பிரசாதத்தை பெற்றுக்கொண்டு மலைமீது இருந்து கீழே இறங்கி புறப்பட்டுச் சென்றார். பழனி முருகன் கோவில் குடமுழுக்கு நிறைவடைந்த பிறகு அடுத்தடுத்து சினிமா நடிகர்கள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்