மேலும் அறிய

Netflix 2024 Release: ஓடிடி வசத்தில் முன்னணி இயக்குநர்கள்: 8 படங்கள், 14 வெப் சீரிஸ்களை வெளியிடும் நெட்ஃப்ளிக்ஸ்!

2024ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் இணைய தொடர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

2024ஆம் ஆண்டும் மொத்தம் 8 திரைப்படங்கள் மற்றும் 14 இணைய தொடர்கள் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் தயாரிப்பில் வெளியாக இருக்கின்றன.

நெட்ஃப்ளிக்ஸ்

பிரபல முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான நெட்ஃப்ளிக்ஸ் இந்த ஆண்டு வெளியிடும் படங்கள் குறித்தான தகவல்களை வெளியிட்டுள்ளது. மொத்தம் 8 திரைப்படங்கள் மற்றும் 14 வெப் சீரீஸ்கள் இந்த ஆண்டு நெட்ஃப்ளிஸ் தயாரித்து அதே தளத்தில் வெளியாக இருக்கின்றன. இதில் பாலிவுட்டின் பிரபல இயக்குநர்கள் சிலர் முதன்முறையாக ஓடிடி தளங்களில் தங்களது படங்களை நேரடியாக வெளியிடுகிறார்கள்.

அமர் சிங் சம்கிலா (Amar Singh Chamkila)

Netflix 2024 Release: ஓடிடி வசத்தில் முன்னணி இயக்குநர்கள்: 8 படங்கள், 14 வெப் சீரிஸ்களை வெளியிடும் நெட்ஃப்ளிக்ஸ்!

பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான இம்தியாஸ் அலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அமர் சிங் சம்கிலா. ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மறைந்த பஞ்சாப் பாடகரான அமர் சிங் சம்கிலாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. பரினீதி சோப்ரா , தில்ஜித் தோசாஞ்ச் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

ஹீராமண்டி

Netflix 2024 Release: ஓடிடி வசத்தில் முன்னணி இயக்குநர்கள்: 8 படங்கள், 14 வெப் சீரிஸ்களை வெளியிடும் நெட்ஃப்ளிக்ஸ்!

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி நெட்ஃப்ளிக்ஸ் தளத்திற்காக இயக்கியிருக்கும் இணையத் தொடர் ஹீராமண்டி (Heeramandi) . சோனாக்ஷி சின்ஹா, ​​ஹுமா குரேஷி, அதிதி ராவ் ஹைதாரி, மனிஷா கொய்ராலா, ரிச்சா சட்டா உள்ளிட்ட நடிகைகள் இத்தொடரில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஹீராமண்டி என்றால் வைரச் சந்தை. இந்திய சுதந்திரம் போராட்டக் காலத்தை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர் முழுக்க முழுக்க பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

தோ பட்டி (Do Patti) 

Netflix 2024 Release: ஓடிடி வசத்தில் முன்னணி இயக்குநர்கள்: 8 படங்கள், 14 வெப் சீரிஸ்களை வெளியிடும் நெட்ஃப்ளிக்ஸ்!

கஜோல் மற்றும் கிருத்தி சனோன் இணைந்து நடித்து ஷஷாங்கா சதுர்வேதி இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் தோ  பட்டி. இதன் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப் படவில்லை

மஹாராஜ் (Maharaj)

Netflix 2024 Release: ஓடிடி வசத்தில் முன்னணி இயக்குநர்கள்: 8 படங்கள், 14 வெப் சீரிஸ்களை வெளியிடும் நெட்ஃப்ளிக்ஸ்!

ஷாலினி பாண்டே, ஜுனைத் கான், ஜெய்தீப் அஹ்லாவத் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் மஹாராஜ். சித்தார்த் மல்ஹோத்ரா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பத்திரிகையாளரின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி உள்ளது.

மர்டர் முபாரக் (Murder Mubarak)

Netflix 2024 Release: ஓடிடி வசத்தில் முன்னணி இயக்குநர்கள்: 8 படங்கள், 14 வெப் சீரிஸ்களை வெளியிடும் நெட்ஃப்ளிக்ஸ்!

சாரா அலிகான், கரிஷ்மா கபூர், பங்கஜ் திரிபாதி, விஜய் வர்மா, டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பலர் நடித்து உருவாகி இருக்கும் த்ரில்லர் படம் மர்டர் முபாரக்.

விஜய் 69

Netflix 2024 Release: ஓடிடி வசத்தில் முன்னணி இயக்குநர்கள்: 8 படங்கள், 14 வெப் சீரிஸ்களை வெளியிடும் நெட்ஃப்ளிக்ஸ்!

அக்‌ஷய் ராய் இயக்கத்தில் அனுபம் கெர் நடித்துள்ள படம் விஜய் 69. யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

டப்பா கார்டெல் (Dabba Cartel)

Netflix 2024 Release: ஓடிடி வசத்தில் முன்னணி இயக்குநர்கள்: 8 படங்கள், 14 வெப் சீரிஸ்களை வெளியிடும் நெட்ஃப்ளிக்ஸ்!

ஜோதிகா, ஷபானா ஆஸ்மி, ஷாலினி பாண்டே, நிமிஷா சஜயன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ள வெப் சீரிஸ் டப்பா கார்டெல். 

இவை தவிர்த்து டாப்ஸி நடித்துள்ள ஃபிர் ஆயின் ஹசீன் தில்ருபா, சிகந்தர் கா முகத்தர், வைல்டு வைல்டு பஞ்சாப், கோட்டா ஃபாக்டரி சீசன் 3 , காக்கி தி பெங்கால் சேப்டர் , மாம்லா லீகல் ஹேய்,  மண்டலா மர்டர்ஸ், மிஸ் மேட்ச்டு, யஹ் காலி காலி ஆங்கேன், தி கிரேட் இந்தியன் கபில் ஷோ, டு கில் ஏ டைகர் உள்ளிட்ட படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க

TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி

DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்

ABP Premium

வீடியோ

வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்புPongal Gift :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்

firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி

Pongal Release : கல்லா கட்டப்போவது யார் ? இந்த பொங்கலுக்கு இத்தனை படங்களா ?

Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..

Embed widget