Valimai | காத்திருக்கும் ரசிகர்கள்.. ட்விட்டரில் தெறிக்கும் வலிமை அப்டேட் பதிவுகள்.!
அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
![Valimai | காத்திருக்கும் ரசிகர்கள்.. ட்விட்டரில் தெறிக்கும் வலிமை அப்டேட் பதிவுகள்.! First Look Motion Poster of Ajith 's Much Awaited Valimai will be out this evening twitter trending Valimai | காத்திருக்கும் ரசிகர்கள்.. ட்விட்டரில் தெறிக்கும் வலிமை அப்டேட் பதிவுகள்.!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/11/2e4422fb3d61aa1df0d4061aa92c4142_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் காட்சிகள் வெளிநாட்டிலும், இங்கும் படமாக்கப்பட்ட நிலையில், கொரோனா முதல் அலையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. முதல் அலை ஓய்ந்த பிறகு, ஹைதாராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடத்தப்பட்டது. மூன்றாவது அலையால் மீண்டும் தொடங்கப்பட்ட படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. அஜித் தொடர்பான சில காட்சிகளும், ஒரு சண்டைக்காட்சி மட்டுமே படமாக்க இருப்பதால், இன்னும் சில தினங்களில் அதுவும் படமாக்கப்பட்டு விடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மற்ற நடிகர்களின் படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் நிலையில், வலிமை குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகாததால், விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அஜித் ரசிகர்கள், இப்படத்தின் தயாரிப்பாளர், படம் சம்பந்தபட்டவர்களை மட்டுமில்லாமல், எங்கெங்கெல்லாம், யார், யாரிடமோ ‘வலிமை’ படம் குறித்த அப்டேட் கேட்டு வருகின்றனர்.இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக, ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுவாவது நடக்குமா? என்று இன்று மாலை தெரிந்துவிடும். பலரும் இந்த தகவலை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
Waiting for 6 pm today #ValimaiMotionPoster #valimaiupdate #ThalaAjith
— sathish sivalingam weightlifter (@imsathisholy) July 11, 2021
YESS! FINALLY🔥😎#ThalaAjith's #Valimai First Look Motion Poster will be out today evening after 6 PM IST#ValimaiMotionPoster #AjithKumar #ValimaiFirstLook
— Kaushik LM (@LMKMovieManiac) July 11, 2021
Let the celebrations begin ..🥳🥳🥳💥🎉#Thala #Ajith 's #Valimai First Look Motion Poster will be out this evening ...#ThalaAjith @BoneyKapoor#ValimaiMotionPoster
— Girish Johar (@girishjohar) July 11, 2021
The eagerly awaited #Thala #Ajith 's #Valimai First Look Motion Poster will be out today evening after 6 PM!
— Sreedhar Pillai (@sri50) July 11, 2021
#BREAKING : The most expected #Thala #Ajith 's #Valimai First Look Motion Poster will be out this evening after 6 PM IST..
— Ramesh Bala (@rameshlaus) July 11, 2021
THE 2 years WAIT ENDS TODAY. #ValimaiMotionPoster today evening.
— LetsOTT GLOBAL (@LetsOTT) July 11, 2021
Finally, #Valimai day is here… #ValimaiMotionPoster and #ValimaiFirstLook 🔥 6PM!
— Rajasekar (@sekartweets) July 11, 2021
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)