“எனக்கு உற்சாகம் தந்த அஜித்தின் அட்வைஸ்” - எஃப்.ஐ.ஆர் இயக்குநர் மனு ஆனந்த் ஷேரிங்ஸ்
கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் அஜித் நடித்த படம் ‘என்னை அறிந்தால்’. இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் மனு ஆனந்த்.
விஷ்ணு விஷால், கெளதம் வாசுதேவ், மஞ்சிமா மோகன், ரெய்சா வில்சன் ஆகியோரது நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘எஃப்.ஐ.ஆர்’. மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. கெளதம் வாசுதேவிடம் உதவி இயக்குனராக இருந்த மனு ஆனந்த், நடிகர் அஜித் பகிர்ந்த ரகசியத்தை பற்றி பேசி இருக்கிறார்.
கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் அஜித் நடித்த படம் ‘என்னை அறிந்தால்’. இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் மனு ஆனந்த். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அஜித் தனக்கு பல அறிவுகளை தந்ததாக தெரிவித்திருக்கிறார். அவருடனான அந்த பயணம் மிகவும் உற்சாகம் அளித்ததாக தெரிவித்திருக்கிறார்.
The main faces of #FIR in these nice new #FIRStills@TheVishnuVishal @mohan_manjima @raizawilson @Reba_Monica @maalaparvathi @menongautham @itsmanuanand #FIRonFeb11 pic.twitter.com/AO5zX52Rch
— Kaushik LM (@LMKMovieManiac) February 4, 2022
இது குறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் அவர், “கெளதம் வாசுதேவிடம் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன். என்னை அறிந்தால் படத்தில் அஜித் சாருடன் பணியாற்றியபோது, அவர் எனக்கு அறிவுரைகளை கூறியிருக்கிறார். அவரது அறிவுரைகள் என்னுடைய இயக்குனர் பயணத்தில் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தந்தது” என தெரிவித்திருக்கிறார்.
இத்திரைப்படத்தில் முன்னணி நடிகராக நடித்திருக்கும் விஷ்ணு விஷால்தான் படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், “படம் முடியும் வரை நடிகராகவும், தயாரிப்பாளராகவும் விஷ்ணு முழு ஆதரவை கொடுத்தார். படம் வெளியாவதற்கு முன்பே, 20 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டி இருக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது. எஃப்.ஐ.ஆர் திரையரங்குகளில் வெளியாவதால், அதிக மக்கள் பார்த்து கொண்டாட வேண்டுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என தெரிவித்திருக்கிறார். நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்