Ravindar Chandrasekaran: தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரன் கைது...அதிர்ச்சியில் மகாலட்சுமி..! என்ன நடந்தது?
Ravindar Chandrasekaran Arrest: ரூ.16 கோடி மோசடி புகாரில் சின்னத்துறை நடிகை மகாலட்சுமி கணவர் ரவீந்தர் சந்திரசேகரன் கைது
Ravindar Chandrasekaran Arrest: சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும், சினிமா தயாரிப்பாளருமான ரவிந்தர் சந்திரசேகர் 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள செய்தி வெளியாகி உள்ளது.
லிப்ரா புரொடெக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவிந்தர் சந்திரசேகரன், கடந்த ஆண்டு சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்தது ட்ரெண்டாகியது. திருமணத்திற்கு பிறகு இணையதளத்தில் பிசியாக இருந்து வந்த ரவிந்தர் சந்திரசேகரன், தனது மனைவி மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வந்தார்.
View this post on Instagram
கடந்த வாரம் தனது முதலாமாண்டு திருமண நாளை மகாலாட்சுமியுடன் கொண்டாடிய புகைப்படங்களை ரவிந்தர் சந்திரசேகரன் இணையத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் மோசடி புகாரில் அவர் கைது செய்திருப்பதாக வெளியான தகவல் திரைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர் அளித்துள்ள புகாரில், கழிவுகளிடம் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க உள்ளதாகவும், அதில் பங்குதாரராக சேர்த்து கொள்ள தன்னிடம் ரூ.16 கோடி வாங்கி மோசடி செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு நடந்ததாக கூறும் இந்த மோசடி புகாரில் வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், ரவிந்தர் சந்திரசேகரனை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று மேலும் ரவீந்தர் 2 பேரிடம் 8 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் விஜய் என்பவர் ரவிந்தர் சந்திரசேகரனுக்கு எதிராக ஆன்லைனில் மோசடி புகார் அளித்திருந்தார். அதில், நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டியதாக கூறி தன்னிடம் இருந்து ரூ.20 லட்சம் வரை வாங்கி கொண்டு மோசடி செய்ததாக கூறப்பட்டிருந்தது. இதனால் ரவிந்தர் சந்திரசேகரனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: Jawan Review : கலெக்ஷனா? காப்பியா?.. அட்லீ செய்தது என்ன?.. ஜவான் படம் முழு விமர்சனம் இதோ..!