மேலும் அறிய

Kerala Crime Files: எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் ‘கேரளா க்ரைம் ஃபைல்ஸ்’ வெப் சீரிஸ் டீசர்.. ரசிகர்கள் வரவேற்பு

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ்” தொடரின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ்” தொடரின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

டிஸ்னி பிளாஸ் ஹாட்ஸ்டார் தளம்

தியேட்டர்களுக்கு இணையாக ஓடிடி தளங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஓடிடி தளங்களின் வளர்ச்சி என்பது மிகப்பெரியதாகவே உள்ளது. இருந்த இடத்தில் இருந்தே உலக அளவிலான படங்கள், வெப் தொடர்கள், சீரியல்கள் என அனைத்தையும் கண்டுகளுக்கும் வகையிலான இந்த டெக்னாலஜி உண்மையில் ஒரு வரப்பிரசாதம் தான். 

அந்த வகையில் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளாஸ் ஹாட்ஸ்டார்  தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது. அந்த வகையில் தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா”  சீரிஸ்  டீசரை வெளியிட்டுள்ளது. 

“கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா”

இதில் மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களான லால், அஜு வர்கீஸ் முதன்மை கேரக்டர்களில் நடித்துள்ளனர். க்ரைம் த்ரில்லர் பின்னணியில், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்த்தும் வகையில் பரபரப்பான திரைக்கதையுடன் இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.  கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீரிஸ் மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. 

தற்போது வெளியாகியுள்ள புதிய டீசரில் லால் மற்றும் அஜு வர்கீஸ் இருவரும் பாலியல் தொழிலாளியின் சவால் மிகுந்த கொலை வழக்கு ஒன்றினை விசாரிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு க்ளூ, ஒரு பெயர் மற்றும் லாட்ஜின் பதிவேட்டில் பொறிக்கப்பட்ட - "ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா" எனும் போலி முகவரி கிடைக்கிறது. இந்த சிக்கலான சவால் மிகுந்த வழக்கை காவல்துறையினர் எப்படி விசாரிக்கிறார்கள் என்பதை சுற்றியே இந்த சீரிஸின் கதை அமைக்கப்பட்டுள்ளது. 

படு சுவாரஸ்யமான திருப்பங்களும்,ஆச்சரியங்களும் நிறைந்த ஒரு ஆழமான த்ரில்லர் வெப் சீரிஸாக “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா”  உருவாகியுள்ளது.  இந்த சீரிஸை First Print Studios சார்பில் ராகுல் ரிஜி நாயர் தயாரித்துள்ளார். இயக்குநர் அஹம்மது கபீர் இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸின் கதையை ஆஷிக் ஐமர் எழுதியுள்ளார். 

ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்ய,  ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். மகேஷ் புவனேந்த் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Embed widget