லோகேஷின் LCU போட்டியாக வந்த வெற்றிமாறனி...இணையத்தில் டிரெண்டாகும் VCU
லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய LCU கதையுலகத்தைத் தொடர்ந்து வெற்றிமாறனின் VCU (வெற்றிமாறன் சினிமேட்டிக் யுனிவர்ஸ் ) சமூக வலைதளத்தில் டிரெண்டாகிறது

வெற்றிமாறன் சினிமேட்டிக் யுனிவர்ஸ்
இயக்குநர் வெற்றிமாறன் அடுத்தபடியாக சிம்புவை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டது. வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்த வடசென்னை கதையுலகின் ஒரு பகுதியாக இந்த படத்தை இயக்கி வருகிறார். அடுத்த ஆண்டு வடசென்னை 2 படத்திற்கான பணிகளும் தொடங்க இருக்கின்றன. சூர்யாவுடன் இயக்கவிருந்த வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால் இப்படத்தை 3 மாதங்களில் இப்படத்தை எடுத்து முடிக்க இருக்கிறார் வெற்றிமாறன். இப்படியான நிலையில் வெற்றிமாறனின் ரசிகர்கள் வெற்றிமாறன் சினிமேட்டிக் யுனிவர்ஸை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.
#Vetrimaaran:
— AmuthaBharathi (@CinemaWithAB) June 30, 2025
"#STR49 set in the world of Vadachannai, but it's not #vadachennai2. As #Dhanush is the copyright holder of Vadachannai film, I said that I'm making a film with #SilambarasanTR in Vadachannai world. Dhanush didn't even asked a single rupee & said that he will give… pic.twitter.com/UiMSqfYAvE
LCU vs VCU
சினிமேட்டிக் யுனிவர்ஸ் என்பது ஒரே கதையுலகத்தை மையமாக வைத்து வெவ்வேறு நாயகர்களை வைத்து எடுக்கப்படும் திரைப்பட வரிசை. ஹாலிவுட்டில் மார்வல் சினிமேட்டிக் யுனிவர்ஸை அடிப்படையாக வைத்து அதனும் வேவ்வேறு நாயகர்களின் கதையை வெளியாகியுள்ளன. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இதே போக்கை தமிழ் வெகுஜன சினிமாவிற்குள் அறிமுகப்படுத்தினார். கார்த்தி நடித்துள்ள கைதி , கமல் நடித்துள்ள விக்ரம் , சூர்யா நடிக்க இருக்கும் ரோலக்ஸ் , விஜய் நடித்துள்ள லியோ , ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் பென்ஸ் ஆகிய படங்கள் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸின் பகுதியாக இதுவரை இணைந்துள்ளன. தற்போது வெற்றிமாறன் சினிமேட்டிக் யுனிவர்ஸை லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
So officially we have 2 Cinematic Universe in Kollywood 😀🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) June 30, 2025
- #LCU (Lokesh Cinematic Universe)
- #VCU (VetriMaaran Cinematic Universe)
Looking forward to witness how VetriMaaran is going to connect the dots of Vadachannai world between #Dhanush & #SilambarasanTR 🔪🩸 pic.twitter.com/w3SDGeyPA2





















