மேலும் அறிய

HBD Soori: விடாமுயற்சியின் பலன்.. காமெடி நடிகர் to ஹீரோ.. சூரியின் பிறந்தநாள் இன்று..!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக வலம் வந்து இன்று ஹீரோவாக ப்ரோமோஷன் பெற்றுள்ள நடிகர் சூரி இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக வலம் வந்து இன்று ஹீரோவாக ப்ரோமோஷன் பெற்றுள்ள நடிகர் சூரி இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

மக்களை மகிழ்விக்கும் கலைஞன் ‘சூரி’

திரையில் நம்மை மகிழ்விக்கும் கலைஞர்கள் எல்லோரும் பெரிய குடும்ப பின்னணியில் இருந்து வருவதில்லை. அப்படி வந்தாலும் தங்கள் முயற்சியின் மூலமாகவே மக்களின் மனதில் இடம் பிடிப்பார்கள். இதில் நகைச்சுவை நடிகர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தங்களை கேலிக்குள்ளாக்கி, வருத்திக் கொண்டு பிறரை சிரிக்க வைத்து மகிழ்ச்சி காண்பதே தாங்கள் படும் கஷ்டங்களுக்கு அருமருந்து என பிரபலங்களே சொல்வார்கள். அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர் தான் சூரி. 

மதுரை மாவட்டம் ராஜாக்கூர் என்ற கிராமத்தில் முத்துசாமி மற்றும் வேங்கையரசி அம்மாள் தம்பதிக்கு மகனாக  பிறந்த சூரி பொருளாதார வசதியின்மையால் 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிராமத்தில் கூலி வேலைகளை செய்தார். அப்போது அவருக்குள் சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது.இதனால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார். இங்கும் கிடைத்த வேலைகளை செய்துக் கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

திருப்புமுனையாக அமைந்த பரோட்டா காமெடி

ஆனால் திரைக்கு பின்னால் தான் இவருக்கான முதல் வாய்ப்பு அமைந்தது.  மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி படத்தில் ஒரு காட்சியில் தோன்றும் அவர், 10க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் படங்களில் ஒரே ஒரு நொடி மட்டுமே தோன்றுவார்.  இப்படியான நிலையில் தான்  சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படம். இதில் அசால்ட்டாக  50 பரோட்டாக்களை  சாப்பிடுபவராக அவர் செய்த சம்பவம் சரித்திரமாக மாறியது. தனக்கென ஒரு பாடி லாங்குவேஜ், வட்டார மொழியை உருவாக்கி கொண்டு ரசிகர்களிடம் புகழ்பெற ஆரம்பித்தார். 

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், களவாணி, நான் மகான் அல்ல, சுந்தரப்பாண்டியன், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, ஜில்லா, பூஜை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரத்துரை, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், கடைக்குட்டி சிங்கம் என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். 

‘மனுசன் பின்னிருவாரு’ என சொல்லும் ரசிகர்கள்

சூரியின் வசனமொழி அனைவருக்கும் சிரிப்பலையை வரவழைக்கும் வகையில் இருக்கும். அதுவும் கிராமத்து பின்னணியிலான கதையில் ‘மனுசன் பின்னிருவாரு’ என ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு அவ்வளவு இயல்பாக நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களிலும் சூரி நடித்துள்ளார். வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோருக்கு பின்னால் தனது திறமையால் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவர் கேட்காமலேயே ஹீரோவாகும் வாய்ப்பும் சூரியை தேடி வந்தது. 

அதுவும் தமிழ் சினிமாவில் அனைத்து பிரபலங்களும் நடிக்க ஆசைப்படும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சொல்லப்போனால் சூரியின் நகைச்சுவையை தாண்டி நடிப்புத்திறமையும் வெளிப்பட்டது. விடுதலை படத்திற்காக சிக்ஸ் பேக் உடற்கட்டு வைப்பது தொடங்கி பல பரிணாமங்களை சூரி செய்தார். முயற்சி செய்தால் நிச்சயம் ஒருநாள் வெற்றி நம்மை தேடி வந்து சேரும் என்பதற்கு தமிழ் சினிமாவில் சூரியும் ஒரு எடுத்துக்காட்டு...!

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Embed widget