இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
தனது சம்பள பாக்கியை தரும்வரை டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இதயம் முரளி திரைப்படத்தின் ரிலீஸை தடைசெய்யவேண்டும் என சுதா கொங்காரா மனுதாக்கல் செய்திருந்தார்

டான் பிக்ச்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை வெளியிட தடை கோரி இயக்குநர் சுதா கொங்காரா தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இயக்குநர் சுதா கொங்காரா சமீபத்தின் டான் பிக்ச்சர்ஸூக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் . டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தான் இயக்கிய பராசக்தி திரைப்படத்திற்கு தனக்கு ரூ 8 கோடி வரை சம்பளம் பாக்கி இருப்பதாக அவர் தனது மனுவில் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பள பாக்கியை தருவது வரை டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இதயம் முரளி திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். இன்று இதயம் முரளி திரைப்படம் திரைக்கு வந்துள்ள நிலையில் சுதா கொங்காராவின் மனுவை ரத்து செய்துள்ளது உயர் நீதிமன்றம்.
தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், சம்பள பாக்கி தொடர்பான பிரச்சினை தனிப்பட்ட சிவில் உரிமை சார்ந்த விவகாரம் என்றும், அதற்காக ஏற்கனவே தயாராக உள்ள ஒரு திரைப்படத்தின் வெளியீட்டை தடை செய்வது பொருத்தமான தீர்வாக இருக்காது என்றும் கருத்து தெரிவித்தது. இதனையடுத்து, படத்தின் வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. சம்பள பாக்கி தொடர்பான உரிமையை சட்டப்படி தனியாக வழக்கு தொடர சுதா கொங்காராவுக்கு உரிமை இருப்பதாகவும், ஆனால் அதனை காரணம் காட்டி திரைப்பட வெளியீட்டை நிறுத்த முடியாது என்பதையே நீதிமன்றம் தனது உத்தரவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதயம் முரளி
'இதயம் முரளி' திரைப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக கயடு லோஹர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதுடன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். மேலும், ஃபகத் ஃபாசில் , கயடு லோஹர் , ப்ரீத்தி முகுந்தன் , நிஹாரிகா என்.எம்., ரக்ஷன், சுதாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















