Ethirneechal Farhana : வடிவேலுவை பார்த்துதான் தமிழ் பேச கத்துக்கிட்டேன்.. எதிர்நீச்சல் ஃபர்ஹானா யாருன்னு தெரியுமா?
வடிவேலு காமெடியை பார்த்துத்தான் தமிழ் பேச கற்று கொண்டேன் - எதிர்நீச்சல் சீரியலில் ஃபர்ஹானா கேரக்டரில் நடித்து வரும் ஜிபா தகவல்
வடிவேலு காமெடியை பார்த்துத்தான் தமிழ் பேச கற்று கொண்டதாக சீரியலில் ஃபர்ஹானா கேரக்டரில் நடித்து வரும் ஜிபா தெரிவித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களை கொண்டாடதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண் அடிமைத்தனதுக்கு எதிராக எடுக்கப்பட்டும் வரும் சீரியலுக்கு பெண் ரசிகைகள் ஏராளம். அடக்கு முறை, ஆணாதிகத்தை எதிர்த்து குரல்கொடுக்கும் எதிர்நீச்சல் சீரியலின் ஒவ்வொரு கேரக்டரும் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது. இதனால் டிஆர்பி ரேட்டிங்கிலும் எதிர்நீச்சல் சீரியல் முதலிடத்தை தக்க வைத்து கொண்டது. அடுத்தடுத்த டிவிஸ்டுகளை கோண்டுள்ள எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தத்தின் பி.ஏ.வாக ஜிபா ஷெரின் நடித்துள்ளார். ஹிஜாபுடன் சீரியலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜிபா சீரியலில் கிடைத்த வாய்ப்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.
சமூக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜிபா ஷெரின், ”சீரியலில் நான் நடித்ததை பார்த்த என் பிரண்ட்ஸ் உன்னை வில்லியாக நடிக்க வச்சி இருக்காங்களேன்னு கிண்டல் பண்ணி இருக்காங்க. அதுக்கு காரணம் எனக்கு கொஞ்சம் கூட கோபம் வராது. அப்படிப்பட்ட என்னை வில்லியாக பார்ப்பது கொஞ்சம் புதுசா இருக்கு. எதிர் நீச்சலில் ஃபர்ஹானா கேரக்டரில் இன்னும் அதிகமாக இருக்கும்” என்ற ஜிபா, எதிர்நீச்சல் நாடகத்தில் வரும் குணசேகரன் கேரக்டர்தான் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார்.
ஷூட்டிங் ஸ்பாட் சம்பவங்களை பகிர்ந்து கொண்ட ஜிபா, ”நான் ஒரு டீ அடிக்ட்” என்றார். எப்பவும் டீ குடிக்க தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றதுடன், ”ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு டைம் குடித்து விட்டு, மறுபடியும் இன்னும் கொஞ்சம் டீ தாங்கன்னு கேட்பேன்” என்றார். தொடர்ந்து பேசிய ஜிபா ”எனது தாய்மொழி உருது தான். ஆனால், வடிவேலு காமெடிகளை பார்த்துத்தான் தமிழ் பேச கற்றுக் கொண்டேன். முதன்முதலில் நான் பார்த்தது ஃபிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு நடித்திருகும் காமெடியை தான். அப்போது தமிழ் சரியாக புரியாது. தற்போது நன்றாக தமிழ் கற்றுக் கொண்டேன்” என்றார்.
முன்னதாக எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் வைஷ்ணவி தனக்கு நெருங்கிய நண்பர் என்றும், அவர் மூலமாக சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் ஜிபா தெரிவித்தார். தனது குடும்பம் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதால் முதலில் சீரியலில் நடிப்பதை யாரிடமும் கூறவில்லை என்றார்.
ஹிஜாபைத்தானே விருப்பப்பட்டு அணிந்து கொண்டிருப்பதாகவும், ஹிஜாப் அணிய சொல்லி தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றார். மேலும், தன்னை புரிந்து கொண்ட ஒரு முஸ்லீம் பையனைத்தான் திருமணம் செய்து கொள்வேன்” என தெரிவித்தார்.