Madhumitha: போலீஸ இடிச்சது உண்மை தான், ஆனால்... மதுபோதை சர்ச்சைக்கு மதுமிதா விளக்கம்!
Madhumitha : எதிர்நீச்சல் புகழ் மதுமிதா மது போதையில் காரை ஒட்டவில்லை என விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் என மதுமிதா இன்ஸ்டாகிராம் மூலம் கோரிக்கை.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் லீட் ரோலில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை மதுமிதா. கர்நாடகாவைச் சேர்ந்த இவர் ஏற்கெனவே பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் சீரியல் மூலம் தான் மிகவும் பிரபலமானார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு கடற்கரை சாலையில் தன்னுடைய ஆண் நண்பருடன் காரில் வேகமாக வந்து எதிரில் வந்த காவல்காரர் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார் என்றும், அது சம்பந்தமாக அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வந்தது. மேலும் அவர் வாகனத்தை மது போதையில் ஓட்டி வந்தாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து தெளிவான விளக்கம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் மூலம் கொடுத்துள்ளார் நடிகை மதுமிதா.
மதுமிதாவின் நண்பர் ஒருவர் புதிய கார் வாங்கியிருந்ததால், அதை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு கோயிலில் பூஜை போட்டுவிட்டு திரும்புகையில் தான் விபத்து ஏற்பட்டுள்ளது. காரை ஓட்டி வந்த மதுமிதா எதிரில் பைக்கில் வந்து கொண்டிருந்த ரவிக்குமார் என்ற காவலர் மீது மோதியுள்ளார். அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். உடனே விபத்து நடந்த இடத்திற்கு பள்ளிக்கரணை போலீசார் விரைந்து விபத்து ஏற்படுத்தியவர்களிடன் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணை அதிகாரி திருமுருகன் கூறியதன்படி, காரை வேகமாக ஓட்டி வந்ததால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது. காரை ஓட்டி வந்த மதுமிதா குடி போதையில் இல்லை என்றும், அவரிடம் ஓட்டுநர் உரிமம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் மது போதையில் விபத்து ஏற்படுத்தினார் மதுமிதா எனப் பரவிய தகவல் வெறும் வதந்தி என்பது நிரூபணமாகியுள்ளது.
View this post on Instagram
இந்த வந்ததிகள் பரவி வருவது குறித்து மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில் " ஹாய். ஒரு ரூமர் பரவி வருவதை கிளியர் செய்வதற்காக தான் இந்த வீடியோ. எல்லா சோசியல் மீடியாவிலும், யூடியூப் சேனல்களிலும் செய்தியாக ஒரு ஃபேக் நியூஸ் பரவி வருகிறது.
நான் குடித்துவிட்டு போலீஸ்காரர் ஒருவரை அடித்து இருக்கிறேன் என்றும், அவருக்கு பயங்கரமா அடிபட்டு இருக்குன்னு நியூஸ் பரவி வருகிறது. முதலில் அது உண்மையில்லை. நான் குடிப்பதில்லை. ஆமாம் நிஜமாகவே ஒரு மைனர் ஆக்சிடென்ட் நடந்தது. போலீஸ்காரர் நல்லா தான் இருக்காங்க... நானும் நல்லா தான் இருக்கேன். அதனால இந்த மாதிரி ஃபேக் நியூஸ் ஃபேக் வீடியோஸ் எல்லாம் நம்பாதீங்க ப்ளீஸ்" என பேசி இருந்தார் எதிர்நீச்சல் ஜனனி.