Entertainment Headlines: எங்கும் லியோ ஃபீவர் தான்... ட்விஸ்டை போட்டுடைத்த உதயநிதி.. ஷாலினி போட்ட ட்வீட்..!
Entertainment Headlines Oct 18: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- லியோ திரைப்படத்தை இலங்கையில் வெளியிடுவதில் பிரச்சனை...தமிழ் எம்.பிக்கள் விஜய்க்கு கடிதம்
லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இலங்கையில் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் லியோ திரைப்படத்தை நாளை வெளியிட வேண்டாம் என இலங்கை தமிழ் எம்.பி க்கள் நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்கள். அன்றைய தினம் நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி அவர்களை ஆதரித்து போராட்டம் நடைபெற இருப்பதாகவும் லியோ திரைப்படம் வெளியிடப்பட்டால் அது அந்த போராட்டத்தை பாதிக்கும் என அவர்கள் கருதுவதால் விஜயிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்.
- வதந்திக்கு முற்றுப்புள்ளி! வொர்த்! வொர்த்! லியோ பார்த்து புகழ்ந்து தள்ளிய அமைச்சர் உதயநிதி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 19ம் தேதியான நாளை திரையரங்குகளில் வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லியோ படத்தை பார்த்து எக்ஸில் புகழ்ந்து தள்ளியுள்ளார். இதையடுத்து, அந்த போஸ்ட்டை பலரும் ரீ-ட்வீட் செய்து வருகின்றனர். தளபதி விஜய் அண்ணாவின் லியோ 👍🏽👍🏽 , இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறந்த படத்தொகுப்பு, அனிருத் இசை வேறவெலல், அன்பறிவ், 7ஸ்கிரீன்ஸ்டுடியோ 👏👏👏 #LCU 😉! ஆல் தி பெஸ்ட் டீம்! என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
- “சிவகார்த்திகேயன் துரோகம் செய்தாரா? அவர் பாவம்” - இமானுக்கு முதல் மனைவி மோனிகா பதிலடி
இசையமைப்பாளர் டி. இமான், சிவகார்த்திகேயன் தனக்கு மறக்க முடியாத துரோகத்தை பண்ணியதாக நேர்காணல் ஒன்றில் முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் இமானுக்கு இப்போது எந்த படமும் இல்லை என்பதால் இப்படி பேசி பப்ளிசிட்டி பெற நினைக்கிறார். இதனால் சிவகார்த்திகேயன் தான் பாதிக்கப்படுகிறார் என மோனிகா விமர்சித்துள்ளார்.
- விஜய்யின் “லியோ” ரிலீஸ்.. அஜித் வீட்டில் இருந்து வந்த வாழ்த்து செய்தி.. குஷியில் ரசிகர்கள்..!
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் நாளை உலகமெங்கும் வெளியாக உள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 2வது முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளதால் ஒட்டுமொத்த திரையுலகமே நாளைய நாளுக்காக காத்திருக்கிறது.இதனிடையே லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என நடிகை ஷாலினி அஜித்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ், அனிருத் ஆகியோரை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- விஜய் படம் என்றாலே சின்ன, சின்ன பிரச்சினை வருது.. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம்..
நடிகர் விஜய் படம் என்றாலே பிரச்சினை வருகிறது என லியோ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். லோகேஷிடம், “விஜய் படம் என்றாலே ஏதோ ஒரு சின்ன சின்ன பிரச்சினை இருந்துட்டு தான் இருக்கு என ரசிகர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள். விஜய்க்கு பதில் வேறு யாராவதை நடிக்க வைத்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது என நினைக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அவர் படம் என்றாலே சின்ன சின்ன பிரச்சினை இருந்துட்டு தான் இருக்கு. எனக்கு அது மாஸ்டர் பட சமயத்தில் இருந்தே தெரியும் என தெரிவித்துள்ளார்.