Entertainment Headlines June 09: வேட்டையாடு விளையாடு ரீ-ரிலீஸ்... புதுப்படங்கள் ரிலீஸ்... இன்றைய டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines: சினிமாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.
ராகவன் டி.சி.பி. இஸ் பேக்... வேட்டையாடு விளையாடு ரீ - ரிலீஸ்... உற்சாகத்தில் கமல் ரசிகர்கள்..!
2006ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி உள்ளிட்ட பலரும் நடித்த படம் வேட்டையாடு விளையாடு. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்று இன்றளவும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. மேலும் படிக்க
சமுத்திரக்கனியின் செண்டிமெண்ட் டிராமா ‘விமானம்’... டேக் ஆஃப் ஆனதா, இல்லையா.. முழு விமர்சனம்!
நடிகர் சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன், ராகுல் ராமகிருஷ்ணா, அனுசுயா, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் விமானம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிவ ப்ரசாத் யானலா இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு சரண் அர்ஜூன் இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் - கிரண் கொரப்பட்டி இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் எப்படி இருக்கு எனப் பார்க்கலாம்! மேலும் படிக்க
தன் சிலையை அருங்காட்சியகத்தில் பார்த்த ரஜினி.... ஏ.வி.எம். அருங்காட்சியத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!
ஏ. வி. எம் அருங்காட்சியகத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்று பார்வையிட்டு வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக முக்கிய அங்கமாக இருந்து வரும் ஏ.வி.எம் ஸ்டூடியோ பண்பாட்டு அருங்காட்சியகம் ஒன்றை அண்மையில் அமைத்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் படிக்க
சாதிய ரீதியிலான படங்கள்.. வெற்றிமாறன், மாரி செல்வராஜ், மோகன்ஜி, முத்தையா மாறணும் - திருப்பூர் சுப்பிரமணியம் பேச்சு
தமிழ் சினிமாவில் மீண்டும் சாதிய ரீதியிலான திரைப்படங்கள் வெளியாவது குறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கடுமையாக விமர்சித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவரிடம், தொகுப்பாளர், சமீபத்தில் வெளியான ராவணக்கோட்டம், கழுவேற்றி மூர்க்கன், காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் உள்ளிட்ட படங்களை குறிப்பிட்டு மீண்டும் சாதி ரீதியிலான படங்கள் எடுக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் படிக்க
க்யூட்டான தன் இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா.. முதல் திருமண நாளில் வைரலாகும் புகைப்படம்..!
ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகமான நயன்தாரா ரஜினி, விஜய், அஜித், விக்ரம், தனுஷ், சிம்பு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ரசிகர்களால் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா 2015 ஆம் ஆண்டில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் படத்தில் நடித்தார். இந்த படம் விக்னேஷ்சிவனுக்கு திரையுலகில் மட்டுமல்ல, சொந்த வாழ்விலும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும் படிக்க
சீரியல் கில்லர் கதை... சீட்டின் நுனியில் உட்கார வைத்ததா? ’போர் தொழில்’ திரைப்படத்தின் முழு விமர்சனம்!
கரடுமுரடான உயர் க்ரைம் ப்ரான்ச் அதிகாரி லோகநாதன் (சரத்குமார்) தலைமையின் கீழ், விளையாட்டுப்பிள்ளை லுக்கில், புத்தக அறிவு மேலோங்கிய பிரகாஷ் (அசோக் செல்வன்) புதிதாக போஸ்டிங் வாங்கிச் சென்று இணைகிறார். திருச்சியை மையமாக வைத்து, ஒரே மாதிரியான தொடர் கொலைகள் எந்தவித தங்கு தடயமுமின்றி அரங்கேறி மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்துகின்றன. படு க்ளீனாக கொலை செய்யும் சீரியல் கில்லர் தொடர்பான மர்ம முடிச்சுகளை சரத்குமார்- அசோக் செல்வன் இணை எவ்வாறு அவிழ்க்கின்றனர், சீரியல் கொலையாளி யார், அவன் பின்னணி என்ன என்பதை விறுவிறு சைக்காலஜிக்கல் த்ரில்லராக சொல்லி இருக்கும் திரைப்படம் தான் ‘போர் தொழில்’. மேலும் படிக்க
பணக்காரனாக நினைக்கும் ஹீரோ.. பாதை மாறும் பயணம்.. சித்தார்த் நடித்த டக்கர் படம் எப்படி? - முழு விமர்சனம் இதோ..!
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள படம் 'டக்கர்’. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை திவ்யான்ஷா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். நீண்ட கால தயாரிப்பில் இருந்த இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க