Entertainment Headlines June 06: வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2ஆம் பாகத்தின் டீஸர்... வீரன் படத்தின் வசூல்... இன்றைய டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines: சினிமாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏ.பி.பி. நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.
- Lust Stories 2: தமன்னா, கஜோல், ம்ருனால் தாகூர்... வெளியானது லஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டாம் பாகத்தின் டீஸர்
தமன்னா, கஜோல், ம்ருனால் தாகூர் ஆகியோர் நடித்துள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. தமன்னா, கஜோல், ம்ருனால் தாகூர் ஆகியோர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். பாலியல் சார்ந்த கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆந்தாலாஜி லஸ்ட் ஸ்டோரிஸ். சமூகத்திலும் பாலியல் சார்ந்த கதைகள் குறித்தான ஒரு புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது லஸ்ட் ஸ்டோரீஸ். மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/lust-stories-part-2-teaser-stars-tamannaah-bhatia-kajol-and-mrunal-thakur-121652
- Veeran, KatharBasha Endra Muthuramalingam: வீரன் Vs காதர்பாட்சா... யார் கொடி பறக்குது... பட்டையைக் கிளப்பும் வசூல் நிலவரம்!
வீரன், காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம் படங்களின் நான்கு நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. வீரன் திரைப்படம் முதல் நாள் 1.3 கோடிகளும், இரண்டாம் நாள் 1.65 கோடிகளும், மூன்றாம் நாளான நேற்று 2 கோடிகளையும் வசூலித்துள்ளது. மொத்தமாக முதல் மூன்று நாள்களில் இந்தியா முழுவதும் 4.95 கோடிகள் வசூலித்துள்ளது. காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம், முதல் நாள் 1.1 கோடிகளும், இரண்டாம் நாள் 1.22 கோடிகளும், மூன்றாம் நாள் 1.32 கோடிகளும் வசூலித்துள்ளது. நான்காம் நாள் 96 லட்சங்களைத் தோராயமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தமாக இதுவரை இந்தியா முழுவதும் 4.6 கோடிகளை வசூலித்துள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/veeran-kathar-basha-endra-muthuramalingam-movies-boxoffice-collection-day-4-details-121513
- Watch Video: ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட்: தகுந்த பதிலடிக்கு தயாராகும் யோகிபாபு! வீடியோ வைரல்
உருவ கேலி செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மிகவும் தீவிரமாக உடற் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் யோகி பாபு. ஜிம்மில் அவர் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/yogi-babu-works-hard-doing-physical-exercise-at-gym-and-its-video-goes-viral-online-121656
- ‘Maamannan : செட்டில் பல்ட்டி அடிச்சு சிரிப்பாங்க.. வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் குறித்து மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மாமன்னன். வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் , உதயநிதி ஸ்டாலின், ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். மாமன்னன் படம் ரிலிஸுக்குத் தயாராக உள்ளது. படத்தின் புரோமோஷன் வேலைகள் தொடங்கியிருக்கும் நிலையில் பல்வேறு சுவாரஸ்யமானத் தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. நடிகர் ஃபஹத் பாசில் மற்றும் வடிவேலு பற்றிய தகவல்கள் சிலவற்றை பேட்டி ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார் மாரி செல்வராஜ். மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/director-mari-selvaraj-shares-interesting-incidents-from-the-set-of-maamannan-121529
- Guru Somasundaram: மீண்டும் ஹீரோவாக மாறும் குரு சோமசுந்தரம்... சுவாரஸ்யத் தகவல்கள்
மற்றொரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் குரு சோமசுந்தரம். தியாகராஜா குமாரராஜா இயக்கிய ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் குரு சோமசுந்தரம். பின் இயக்குனர் ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். தற்போது மீண்டும் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் குருசோமசுந்தரம். அண்மையில் பேட்டி ஒன்றில் தான் தற்போது நடித்துவரும் படங்கள் குறித்தான விவரங்களை பகிர்ந்துகொண்டார் குரு சோமசுந்தரம். மேலும் படிக்க https://tamil.abplive.com/entertainment/guru-somasundaram-to-act-as-hero-again-kollywood-latest-news-121445