மேலும் அறிய

Entertainment Headlines July 30: இயக்குநர் ஷங்கருக்கு ஸ்பெஷல் நாள்...தளபதி 68 பற்றி வெங்கட் பிரபு... இன்றைய டாப் சினிமா செய்திகள்!

Entertainment Headlines Today July 30: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.

பிரம்மாண்டங்களின் காதலன்.. சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்யும் ஷங்கர்

இரண்டு வகையான இயக்குநர் இருக்கிறார்கள். எல்லாருக்கும் பிடித்த ஒன்றை படமாக்கி வெற்றிபெறுபவர்கள் ஒரு வகை. தனக்கு பிடித்த ஒன்றை படமாக்கி அதை எல்லாருக்கும் பிடித்த ஒன்றாக மாற்றி வெற்றிபெறுபவர்கள்.. இயக்குநர் ஷங்கர் தனது உதவி இயக்குநர் வசந்தபாலனிடம் சொன்னது இது. 1993-ஆம் வருடம் ஜெண்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்யும் சங்கர் இதுவரை மொத்தம் 12 படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் படிக்க

‘வேட்டைய ராஜா பராக் பராக்’ .. சந்திரமுகி-2 படத்தின் அப்டேட்.. லைகா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் வேட்டையன் ராஜா கேரக்டரின் தோற்றம் நாளை அறிமுகம் செய்யப்படும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சந்திரமுகி 2 படத்தை தயாரித்து வருகிறது. இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் இப்படத்தின் ஹீரோவாக நடித்து வருகிறார். சந்திரமுகி கேரக்டரில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

சாதிய தலைவரானார் ஃபஹத் பாசில்? மாமன்னன் ரத்னவேலுவை கொண்டாடும் இணையவாசிகள்..!

மாமன்னன் படத்தில் இடம்பெற்ற ஃபஹத் பாசிலின்  ரத்னவேலு கதாபாத்திரத்தை கொண்டு சாதிய பெருமையை உயர்த்தி பேசுவது போன்று,  சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசில் மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் தான் மாமன்னன். திரையரங்குகளை தொடர்ந்து அண்மையில் ஒடிடி தளத்திலும் வெளியானது. மேலும் படிக்க

என்ன சொல்றீங்க.. பரத்துக்கு இப்படி ஒரு பின்னணி இருக்கா? - இயக்குநர் சீனு ராமசாமி சொன்ன தகவல்

நடிகர் பரத் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி நேர்காணல் ஒன்றில் சொன்ன தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் பரத் திரையுலகில் தனது 20 ஆம் ஆண்டை கொண்டாடி வருகிறார். இது தொடர்பான நேர்காணல் ஒன்றில் பரத்துடன் இயக்குநர் சீனு ராமசாமி கலந்து கொண்டார். மேலும் படிக்க

எல்லை மீறும் ரசிக மனப்பான்மை...பால் அபிஷேகம் செய்து திரையைக் கிழித்த பவன் கல்யாண் ரசிகர்கள்!

நடிகர்களை கடவுளாக வழிபடும் வழக்கம் இந்திய சினிமா ரசிகர்களிடையே காலம் காலமாக இருந்து வருகிறது. அண்மையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்கு கட் அவுட் வைத்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. தங்களது ஆதர்சமான நடிகர்களின் படம் வெளியாகும் போதும் ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் ஏதாவது பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பவன் கல்யாணின் ரசிகர்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளனர். மேலும் படிக்க

“சும்மா தெறிக்கும்” - வெங்கட்பிரபுவின் பதிலால் ட்விட்டரை அலறவிடும் விஜய் ரசிகர்கள்: என்ன நடந்தது?

வெங்கட் பிரபுவின் அந்த ஒரு பதிவால் டிவிட்டரில் தளபதி 68 பற்றிய அறிவிப்பு டிரெண்டாகி வருகிறது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய் நடித்துள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன், திரிஷா, அஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் லியோ படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு அனிரூத் இசை அமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

அதிர்ச்சி.. கை, கால்கள் துண்டாகி விபத்தில் இளம் நடிகர் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்

பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் கன்னட நடிகர் லோகேஷ் பலியான சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  118 கி.மீ., கொண்ட பெங்களூரு - மைசூரு விரைவு நெடுஞ்சாலை கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்ட நிலையில், இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். மார்ச் மாதம் முதல் ஜூன் வரை மொத்தம் 300க்கும் மேற்பட்ட விபத்துகள் இந்த விரைவுச்சாலையில் நடந்ததுள்ளது. மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget