Entertainment Headlines July 15: கலெக்ஷனை அள்ளிய மாவீரன்.. திடீர் ட்ரிப் சென்ற ரஜினி.. இன்றைய சினிமா செய்திகள்...!
Entertainment Headlines Today July 15th: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
![Entertainment Headlines July 15: கலெக்ஷனை அள்ளிய மாவீரன்.. திடீர் ட்ரிப் சென்ற ரஜினி.. இன்றைய சினிமா செய்திகள்...! entertainment headlines today july 15th tamil cinema news Kollywood Update Entertainment Headlines July 15: கலெக்ஷனை அள்ளிய மாவீரன்.. திடீர் ட்ரிப் சென்ற ரஜினி.. இன்றைய சினிமா செய்திகள்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/15/afc0ddeddba26c584e6ae4ba1fba150d1689421396303572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
- மாஸ் காட்டிய மாவீரன்.. தியேட்டருக்கு படையெடுக்கும் ரசிகர்கள்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல்கள் வெளியாகி கோலிவுட் பிரபலங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின், சுனில் குமார், பாலாஜி சக்திவேல், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் முதல் நாளில் தமிழில் ரூ.8 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- மோசமான காட்சிகளில் ஸ்பைடர்மேன் நடிகர்.. இணையத்தில் கழுவி ஊற்றும் ரசிகர்கள்..
ஸ்பைடர்மேன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் டாம் ஹாலண்ட் பாலியல் காட்சிகள் நிறைந்த வெப் சீரிஸில் நடித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆப்பிள் டிவியின் மினி வெப் சீரிஸான தி கிரவுடட் ரூம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்த வெப் சீரிஸில் தன்பாலின ஈர்ப்பாளராக டாம் ஹாலண்ட் நடித்துள்ளார். இதுதொடர்பாக ஹேஸ்டேக்குகளை ரசிகர்கள் இணையத்தில் உலகளவில் ட்ரெண்ட் செய்து வரப்படுகிறது.
- களத்தில் விஜய் மக்கள் இயக்கம்.. பேரணியாக சென்று காமராஜர் சிலைக்கு மரியாதை
காமராஜரின் 121வது பிறந்தநாளை ஒட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரசியலுக்கு வருகை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் நடிகர் விஜய். அதில் ஒன்றாக மக்கள் இயக்கம் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாகி கொண்டுள்ளது. அந்த வகையில் காமராஜர் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை 234 தொகுதிகளிலும், ‘விஜய் பயிலகம்’ தொடங்கப்பட உள்ளது.
- கொஞ்ச நாளைக்கு நோ சினிமா.. திடீர் ட்ரிப் சென்ற ரஜினிகாந்த்.. என்ன காரணம் தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் ஹீரோவாக ஜெயிலர் படத்திலும், சிறப்பு தோற்றத்தில் லால் சலாம் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தாக ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார். அதற்கு நடுவில் ஓய்வு எடுக்கும் வகையில் தற்போது ரஜினி மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
- விஜய்க்கு எழுதப்பட்ட கதையில் மகன் ஜேசன் சஞ்சய்.. விரைவில் உருவாகும் அஜித் படத்தின் 2-ஆம் பாகம்..!
நீ வருவாய் என படத்தின் 2ஆம் பாக கதையை எழுதி வருவதாகவும், விரைவில் இப்படம் உருவாகும் என இயக்குநர் ராஜகுமாரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இந்த கதையில் என்னுடைய மகளான இனியா தான் ஹீரோயின். இதேபோல் ஹீரோயின் வேடத்திற்கு நடிகர் விஜய்யின் மகன் ‘ஜேசன் சஞ்சய்’ மற்றும் சுவலட்சுமி கேரக்டருக்கு ‘கனிஷ்கா விக்ரமன்’ ஆகியோரை நடிக்க வைக்கலாம் என விரும்புவதாகவும் கூறியுள்ளார். அதில் ஒரே ஒரு காட்சியாவது அஜித் நடிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன எனவும் ராஜகுமாரன் கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)