Entertainment Headlines June 23: மாமன்னன் படத்துக்கு வந்த சிக்கல்...வேட்டையாடு விளையாடு ரீ-ரிலீஸ்...‘தண்டட்டி’ விமர்சனம்... இன்றைய சினிமா செய்திகள்!
Entertainment Headlines Today in June 23: சினிமா உலகில் இன்று நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகளில் பார்க்கலாம்.
சீதா ராமம் நடிகையுடன் முதல் முறையாக ஜோடி சேரும் எஸ்.கே... இணையத்தில் தீயாய் பரவும் அப்டேட்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த சிவகார்த்திகேயன் தொடர் வெற்றி படங்களால் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். மிகவும் பிஸியான ஷெட்யூலில் பேக் டூ பேக் படங்களில் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மாவீரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க
யார் இந்த தேவதை... பேர் சொல்லும் பூமகள்...! - குழந்தையுடன் புன்னகைக்கும் ராம்சரண் - வெளியான க்யூட் ஃபோட்டோ
தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனாவுக்கு கடந்த 20 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையை தூக்கியவாறு மகிழ்ச்சியான முகத்துடன் ராம் சரணின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளன. இனிமேல் அப்பாவும் மகளும் .சேர்ந்து டாடிஸ் லிட்டில் பிரின்செஸ் வீடியோக்களை வெளியிடுவதற்கு அதிக காலம் இல்லை. மேலும் படிக்க
தியேட்டர்களை தெறிக்கவிட்ட வேட்டையாடு விளையாடு.. ரீ-ரிலீஸை திருவிழாபோல் கொண்டாடும் ரசிகர்கள்..!
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்,பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட கமல்ஹாசனை பற்றி இந்திய சினிமாவுக்கே சொல்ல வேண்டிய அவசியமில்லை. சினிமாவில் அவருடைய முயற்சிகள் ஒவ்வொன்றும் எதிர்கால தலைமுறைகளுக்கு கிடைத்த பொக்கிஷம் எனலாம். மேலும் படிக்க
‘அந்த ஒரு காரணம்’ : கமலை விமர்சித்து கடிதம் எழுதியது ஏன்? - மாரி செல்வராஜ் கொடுத்த விளக்கம்..
நடிகர் கமல்ஹாசனை விமர்சித்து கடிதம் எழுதியது ஏன் என்பதை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்து சுரேஷ், ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் தயாரித்துள்ள இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் படிக்க
இது தங்கத்தின் கதை... தாறுமாறு செய்யும் கிராமம்; தள்ளாடும் பசுபதி - எப்படி இருக்கு ‘தண்டட்டி’? - பக்கா விமர்சனம்!
ரோகிணி, பசுபதி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா, தீபா உள்ளிட்டோர் நடித்துள்ள தண்டட்டி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.இப்படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா எழுதி, இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார், சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்துள்ளார். மேலும் படிக்க
மாமன்னன் படத்திற்கு தடை கோரிய வழக்கு... உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு என்ன தெரியுமா?
மாமன்னன் படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் உதயநிதி ,ரெட் ஜெயண்ட் மூவிஸ் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. மேலும் படிக்க