Vettaiyaadu Vilaiyaadu: தியேட்டர்களை தெறிக்கவிட்ட வேட்டையாடு விளையாடு.. ரீ-ரிலீஸை திருவிழாபோல் கொண்டாடும் ரசிகர்கள்..!
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்,பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட கமல்ஹாசனை பற்றி இந்திய சினிமாவுக்கே சொல்ல வேண்டிய அவசியமில்லை. சினிமாவில் அவருடைய முயற்சிகள் ஒவ்வொன்றும் எதிர்கால தலைமுறைகளுக்கு கிடைத்த பொக்கிஷம் எனலாம். கிட்டதட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வரும் அவர் முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
ஒரு பக்கம் அரசியல், மறுபக்கம் பிக்பாஸ், இன்னொரு பக்கம் இந்தியன் 2, மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என கமலின் லிஸ்ட் நீண்டுக் கொண்டே செல்கிறது. இதனிடையே 2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்படுகிறது.
He is the real fan Boy of @ikamalhaasan agree or not?#gautamvasudevmenon #VettaiyaaduVilaiyaadu
— Âđhí Vj (@adhityavijay3) June 23, 2023
A film by Gautam@kamala_cinemas
Harris Mams Supermacy❤️
Not involving any lead actors and Gave a blockbuster pic.twitter.com/eUswJi5oRY
இன்று தியேட்டர்களில் வெளியான இப்படத்தை காண ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். பல இடங்களில் காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆன நிலையில் , இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது. செவன்த் சேனல் கம்யூனிகேஷன் சார்பில் மாணிக்கம் நாராயணன் தயாரித்த வேட்டையாடு விளையாடு படம் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 3வது படமாகும்.
Aandavarey 🔥🔥 #VettaiyaaduVilaiyaadu re release FDFS 💥💥 at @kamala_cinemas #KamalHaasan𓃵 pic.twitter.com/45FQbWShTW
— 𝕄𝕒𝕕𝕦𝕣𝕒𝕚🔥 𝕊𝕒𝕟𝕕𝕚𝕪𝕒𝕣 (@Ramhaasan7) June 23, 2023
இந்த படத்தில் கமாலினி முகர்ஜி, ஜோதிகா, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி என பலரும் நடித்திருந்தனர். தொடர்ச்சியாக பெண்கள் கொலை, அதனை விசாரித்து உண்மையை தன் பாணியில் கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி என பக்காவான க்ரைம் த்ரில்லர் கதை அமைக்கப்பட்டிருந்தது. பாடல்களும் பெரிய அளவில் ரசிகர்களை வரவேற்பை பெற்றது.