காந்தா படம் ரொம்ப ஸ்பெஷல்.. ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் துல்கர் சல்மான் நெகிழ்ச்சி!
இந்த படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

சினிமாவின் ஸ்டூடியோ கலாச்சாரத்தை கொண்டாடும் ஒரு முயற்சியாக தான் காந்தா படம் உருவாகியுள்ளதாக நடிகரும், தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்பவர் துல்கர் சல்மான். இவர் அடுத்ததாக காந்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரகனி, பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
இதில் துல்கர் சல்மான், டி.கே.மகாதேவன் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். இதை விட காந்தா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு காரணம் பிரபல நடிகர் ராணா டகுபதி இப்படத்தை தயாரித்திருப்பது தான். நவம்பர் 13ம் தேதி வெளியாகவுள்ள காந்தா படத்தின் ட்ரெய்லர் சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் துல்கர் சல்மான், ”காந்தா படத்தின் பணியாற்றியவர்களின் வாழ்க்கையில் இப்படம் ஒருமுறை மட்டுமே அமையும். அதனை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளோம்.
"We are so much confident in #Kaantha, it's a special film in our career once in a lifetime🛐. I like Tamil so much. Many used to say I'm speaking Tamil more clearly than Malayalam😁. We have made it, only in Tamil & Telugu as studio culture is familiar here🤝"
— AmuthaBharathi (@CinemaWithAB) November 6, 2025
- #DulquerSalmaan pic.twitter.com/TbLhoFnvNu
எனக்கு தமிழ் என்றால் ரொம்பப் பிடிக்கும். நான் பள்ளியில் படிக்கும்போது தமிழ் என்னுடைய மூன்றாவது மொழியாக இருந்தது. மலையாள இயக்குநர்கள் கூட என்னிடம், நீ மலையாளத்தை விட தமிழில் நன்றாகப் பேசுகிறாய் என்று சொல்வார்கள். மேலும், தமிழ் சினிமாவின் வரலாறு கோடம்பாக்கத்தில் தொடங்கியது. காந்தா படத்தில் அந்த ஸ்டுடியோ கலாச்சாரத்தை மீண்டும் கொண்டாடும் முயற்சியாக மீண்டும் பதிவு செய்துள்ளோம்.
இந்த படம் சாதாரணமானது அல்ல. இந்த காலக்கட்டத்தில் நான் ஏகப்பட்ட கதைகளை கேட்டேன். நினைத்திருந்தால் காந்தா பட ஷூட்டிங் நேரத்தில் 8-10 படங்கள் செய்திருக்க முடியும். ஆனால் இப்படம் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அந்த கால படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்” எனவும் துல்கர் சல்மான் கூறியுள்ளார்.





















