DON Release Date: RRR படம் வரட்டும்! தள்ளிப்போகும் டான்! விட்டுக்கொடுத்த சிவகார்த்திகேயன்.. புதிய தேதி அறிவிப்பு!
டான் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது
சின்னத்துரையில் வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயனின் எந்த பட அப்டேட் என்றாலும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அனைத்து வயதினரையும் தனது ரசிகராய் கட்டிப்போட்டிருக்கும் சிவகார்த்திகேயனின் சமீபத்திய ஹிட் டாக்டர். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்துவருகிறார். லைகாவுடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில், டாக்டரில் சிவாவுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’சிவாங்கி, இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படம் வரும் ஜனவரியில் வெளியாகும் எனக் கூறப்பட்டது. பின்னர் மார்ச் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இந்நிலையில் டான் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. RRR படமும் மார்ச் 25ம் தேதி வெளியாகவுள்ளதால் டான் படத்தை மே மாதம் 13ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லைக்கா வெளியிட்ட அறிவிப்பில், ''இந்திய திரை உலகின் தன்னிகரில்லா இயக்குனர் ராஜமெளலி அவர்கள் இயக்கத்தில், உச்ச நட்சத்திரங்களான Jr. NTR மற்றும் ராம் சரண் நடிப்பில், மார்ச் 25ஆம் தேதி “RRR” என்னும் பிரம்மாண்ட திரைப்படம். உலக அளவில் வெளிவர இருக்கிறது..
லைக்கா ப்ரொடக்க்ஷன்ஸ் மற்றும் எஸ்.கே. ப்ரொடக்க்ஷன்ஸ் இணைந்து தயாரித்து, நட்சத்திர நடிகர் திரு. சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில், "டான்" திரைப்படம் அதே மார்ச் 25 ஆம் தேதி வெளிவருவதாக முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
Dear fans, we hope you shower us with the same excitement & love as you always do. 🙏🏻@Siva_Kartikeyan @anirudhofficial @KalaiArasu_ @SKProdOffl @Dir_Cibi @priyankaamohan @iam_SJSuryah @SonyMusicSouth pic.twitter.com/WllfLguJ94
— Lyca Productions (@LycaProductions) March 2, 2022
பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள "RRR" திரைப்படம் வெளியாவதை கருத்தில் கொண்டு, தனது "டான்" ரிலீசுக்கான தேதியை மாற்றுவதற்கு ஒப்புக் கொண்ட திரு. சிவகார்த்திகேயன் அவர்களுக்கும், இவ்விரு படங்களையும் கண்டு களித்து கொண்டாடப் போகும் உங்களுக்கும் எங்களின் பெரும் மகிழ்ச்சியையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்'' எனக் குறிப்பிட்டுள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்