Jason Sanjay: இயக்குநராக களமிறங்கிய ஜேசன் சஞ்சய்.. விஜய் மற்றும் குடும்பத்தினர் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
ஜேசன் சஞ்சய் ஒருவேளை இயக்குநராக ஆகாமல் இருந்திருந்தால் ஹீரோவாக நடித்திருப்பார் தெரியுமா?
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் இயக்குநராக நேற்று ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாவதால் விஜய் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜேசன் சஞ்சய் ஒருவேளை இயக்குனர் ஆகவில்லை என்றால் நடிகராக மாறி இருப்பார் தெரியுமா?
ஜேசன் சஞ்சய் கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்காவில் திரைப்படப் படிப்பைத் படித்து வந்தார். ஆகஸ்ட் 29-ஆம் தேதி அவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பெயரிடப்படாத இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த பத்தாண்டுகளாக பெரிய அளவில் தளபதி விஜய் பேட்டி கொடுக்கவில்லை. ஆடியோ நிகழ்ச்சிகளில் பேசுவதோடு அ சரி. ஆனால், பீஸ்ட் ரிலீஸுக்கு முன்னதாக, இயக்குனர் நெல்சன் அவர் நேர்காணல் மேற்கொண்டார். அப்போது இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சஞ்சய் நடிக்கலாம் என்று கூறி இருந்தார்.
"சஞ்சய் நடிப்பாரா என்று பலர் என்னை அணுகினர். 'பிரேமம்' இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கதையையும் கூறினார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது, சஞ்சய் படத்தில் நடிக்கக முடிவு செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், சஞ்சய் என்னிடம், மேலும் 2 வருடங்கள் காத்திருக்கும்படி என்னை கேட்டுக் கொண்டார். அவர் நடிகராக வருவாரா அல்லது கேமராவுக்குப் பின்னால் இருக்க விரும்புகிறாரா என்பது எனக்குத் தெரியாது. அது அவரவர் விருப்பம். அவர் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் அவருக்கு துணை நிற்போம்” என்று தெரிவித்தார்.
திரைப்பட இயக்குநரும், நடிகரும், ஜேசன் சஞ்சயின் தாத்தாவும் ஆன எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் சஞ்சயின் நம்பிக்கை மற்றும் லட்சியம் குறித்து பகிர்ந்திருந்தார். அதில் தான் இயக்குனராக இருந்த அனுபவத்தை சஞ்சய்யுடன் பகிர்ந்து கொண்டதை பற்றி பேசினார். மேலும்"நீ (சஞ்சய்) டைரக்ட் பண்ணும்போது கவலைப்பட வேண்டாம்னு சொன்னேன். உன்னோட சூப்பர் ஸ்டார் ஒருத்தர் இருக்கார். அதனால நீ சுலபமா டைரக்டர் ஆகலாம்"னு சொன்னேன். அதற்கு அவர், 'இல்லை தாத்தா. விஜய் சேதுபதிதான் என் முதல் ஹீரோ' என்று அந்த பேட்டியில் எஸ்.ஏ.சி தெரிவித்தார்.
மேலும் தன்னை இயக்குநராக நிரூபித்த பிறகே தனது தந்தையை வைத்து தனது படத்தை இயக்குவேன் என்று சஞ்சய் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் எஸ்ஏசி கூறினார்.ஆனால், ஜேசன் சஞ்சய் எப்போதுமே டைரக்ஷனில் ஆர்வம் காட்டுவது போல் தெரிகிறது. ஜேசன் நான்கு வருடங்களுக்கு முன் ‘சிரி’ என்ற குறும்படத்தை இயக்கினார். இப்போது யூடியூப்பில் இந்த குறும்படம் உள்ளது. நான்கு நிமிடங்களைக் கொண்ட இந்த குறும்படம் 10 நிமிடங்கள் கண்ணுக்குத் புலப்படாத ஒரு சிறுவனைப் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.