Mari Selvaraj : இயக்குநர் மாரி செல்வராஜின் புதுமனை புகுவிழாவுக்கு படையெடுத்த சினிமா பிரபலங்கள்..
இயக்குநர் மாரி செல்வராஜ் சென்னையில் கட்டியுள்ள புது வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார்.
பரியேறும் பெருமாள் , கர்ணன் போன்ற வெற்றி படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி அமைத்துள்ளார். இரண்டே படங்களை இயக்கியிருந்தாலும் மாரி செல்வராஜ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் அதிக கவனம் பெற்றவர். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுடன் அவர் கூட்டணி அமைக்க இருப்பதாக வெளியான செய்திகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் சென்னையில் தான் கட்டியிருக்கும் தனது புதிய இல்லத்திற்கு குடும்பத்தோடு குடியேறினார். இந்த நிகழ்வில் இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தானு மற்றும் திரையுலத்தை சார்ந்த நெருக்கமான நண்பர்கள் கலந்துகொண்டார்கள். இவர்களோடு இயக்குனர் மாரியின் மூன்றாவது பட நாயகனும் தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் இல்லதிற்கு சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. அதே போல படத்தில் காமெடியனாக வடிவேலுவும் , முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசிலும் நடிக்கவுள்ளதும் கன்ஃபார்ம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவி தயாரிக்கிறது என்பது கூடுதல் சுவாரஸ்யம்.
உதயநிதி ஒரு கல் , ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அதன்பின்னர் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் , விரைவில் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் , அதன் பொருட்டு மிகப்பெரிய பட்ஜெட்டில் , சிறந்த கூட்டணியுடன் தனது இறுதி படம் இருக்க வேண்டும் என்றே மாரி செல்வராஜுடன் கூட்டணி அமைத்திருப்பதாக கிசு கிசுக்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இறுதியாக வெளியான சைக்கோ படத்தில் , அவரது நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது. உதயநிதி தற்போது கண்ணை நம்பாதே, நெஞ்சுக்கு நீதி மற்றும் பெயரிடப்படாத மகிழ் திருமேனி படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை அருண் ராஜா காமராஜ் இயக்குகிறார். இந்த படம் ஹிந்தியில் வெளியான 'ஆர்டிகிள்-15'ன் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படம் மற்றும் கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: எல்லா புகழும் அமீரையேச் சேரும்...! பருத்திவீரன் குறித்து நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி...!