Divya Spandana: இறந்துவிட்டதாக பரவிய வதந்தி...ரம்யா போட்ட அந்த ட்வீட்...குஷியில் ரசிகர்கள்!
நடிகை திவ்யா ஸ்பந்தனா இறந்ததாக வதந்தி பரவிய நிலையில் தன்னுடைய வலைதளத்தில் ட்விட் செய்துள்ளார்.
![Divya Spandana: இறந்துவிட்டதாக பரவிய வதந்தி...ரம்யா போட்ட அந்த ட்வீட்...குஷியில் ரசிகர்கள்! Divya Spandana See you in namma uru soon Divya Spandana tweet Divya Spandana: இறந்துவிட்டதாக பரவிய வதந்தி...ரம்யா போட்ட அந்த ட்வீட்...குஷியில் ரசிகர்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/06/85bd8b81d5c649d3f04b3ac088ef8dff1693990925704572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Divya Spandana: நடிகை திவ்யா ஸ்பந்தனா இறந்ததாக வதந்தி பரவிய நிலையில் தன்னுடைய வலைதளத்தில் ட்விட் செய்துள்ளார்.
வதந்திக்கு முற்றுப்புள்ளி:
தமிழில் 2004 ஆம் ஆண்டு சிம்பு நடித்த குத்து படத்தில் திவ்யா என்ற பெயரில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் “குத்து” ரம்யா என்ற பெயரில் அழைக்கப்பட்டார். தொடர்ந்து அர்ஜூனுடன் கிரி, தனுஷ் நடித்த பொல்லாதவன், ஷாம் நடித்த தூண்டில், சூர்யா நடித்த வாரணம் ஆயிரம், ஜீவா நடித்த சிங்கம் புலி உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
அதேசமயம் கன்னடத்தில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்த திவ்யா ஸ்பந்தனா, கர்நாடகாவின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் முதலமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவில் பேத்தியாவார். 2012 ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸில் சேர்ந்த திவ்யா 2013 ஆம் ஆண்டு மாண்டியா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் திவ்யா ஸ்பந்தனா, இன்று திடீரென மாரடைப்பால் காலமானதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. உடனடியாக பலரும் அதிர்ச்சியில் இரங்கலை தெரிவிக்க தொடங்கினர்.
ரம்யா போட்ட ட்வீட்:
அதேசமயம் பலரும் அதிர்ச்சியில் இரங்கலை தெரிவிக்க தொடங்கினர். அதேசமயம் இது உண்மையா? பொய்யா? என தெரியாமல் பலரும் குழம்பி தவித்தனர். இப்படியான நிலையில் அந்த தகவல் வதந்தி என்று உறுதி செய்யப்பட்டது. திவ்யா ஸ்பந்தனா சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவாவில் நலமுடன் இருப்பதாகவும், இரண்டு நாட்களில் இந்தியா திரும்புவார் எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் விளக்கம் அளித்தனர்.
🤗🤗♥️♥️ See you in namma uru soon!
— Ramya/Divya Spandana (@divyaspandana) September 6, 2023
அதேசமயம், திவ்யாவின் தோழியும் ஊடகவியலாளருமான சித்ரா சுப்ரமணியம் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பதிவுகளை வெளியிட்டிருந்தார். அதில் முதல் பதிவில், “மிகவும் திறமையான பெண்மணியான திவ்யா ஸ்பந்தனாவினுடான இரவு உணவு சந்திப்பு அற்புதமானது. பெங்களூர் மீதான காதல் உட்பட பல விஷயங்களைப் பேசினோம்” என தெரிவித்திருந்தார். இந்த பதிவானது திவ்யா உயிரிழந்து விட்டதாக தகவல் பரவிய நேரத்தில் பதிவிடப்பட்டது. இதற்கு பதிலளித்த திவ்யா, ”விரைவில் உங்களை நம்ம ஊரில் சந்திக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். இதன்மூலம் திவ்யா இறந்துவிட்டதாக வெளியான போலி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)