மேலும் அறிய

Thangar Bachan: ஷூட்டிங் முடிஞ்சு, அந்த இடத்துல படுத்து தூங்கினார்.. ரஜினி பற்றி வாவ் தகவல்கள் சொன்ன தங்கர்பச்சான்

தமிழ் சினிமாவின் பிரபலங்களுடன் பணியாற்ற அனுபவங்கள் குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் பகிர்ந்துகொள்கிறார்.

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சானின் திரைப்படங்கள் தனித்துவமான கதையை முன்வைப்பவைகளாக இருந்திருக்கின்றன. இவர்  முதன் முதலாக கடந்த 2002 ஆம் ஆண்டு பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில்  வெளியான ’அழகி’ படத்தை இயக்கியிருந்தார். அழகி படத்தை எல்லாரும் கொண்டாடி தீர்த்தார்கள்.  பெரும் வசூல் பெற்ற திரைப்படமாக அமைந்ததோடு, சிறந்த பின்னணி பாடகியாக பாட்டுச் சொல்லி பாடச்சொல்லி பாடலுக்காக சாதனா சர்கமிற்கு தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.

சொல்ல மறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி, களவாடிய பொழுதுகள் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான களவாடிய பொழுதுகள் படம்தான் இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ஆகும். 

தங்கர் பச்சான் இயக்குனராவதற்கு முன்பு, ரஜினி,கமல் ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்களின் படத்தில் பணியாற்றியுள்ள அனுபவம் பற்றி நடிகர் சித்ரா லஷ்மணன் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்கிறார். 

ரஜினியுடன் தங்கமகன் திரைப்பட பயணம் பற்றி....

ரஜினிகாந்த் உடனான படம் மறக்க முடியாது. ரஜினி சார் ரொம்பவே எளிமையானவர்.  தங்கமகன் ஷூட்டிங்கின்போது நான் அதை உணர்ந்தேன். திரைப்பட ஷூட்டிங் முடிந்து அப்படியே புல் தரையாக இருந்தாலும் ஓய்வு எடுப்பார். அந்தளவிற்கு எளிமையானவர். எல்லோரிடமும் எளிமையுடன் பழகும் குணம் கொண்டவர். 

நீங்கள் கண்டு வியக்கும் நபர் யார்? அவரைப் பற்றி....

நான் கண்டு வியந்த நபர் என்றால், அது கமல்ஹாசன் தான். அவரை பற்றி எல்லோராலும் அறிந்து கொள்ள முடியாது. நான் அவருடன் கூட இருந்ததால் சொல்கிறேன். அபூர்வ சகோதரரர்கள் படத்தில் பஞ்சு அருணாச்சலம் சார் வசனம், சிங்கார சீனிவாச ராவ்  படத்தை இயக்கியிருந்தார். இந்தப் பட ஷூட்டிங்கில் அப்பு கதாப்பாத்திரத்திற்காக குழி வெட்டப்பட்டிருக்கும். கமல்ஹாசன் சார் வந்து வேறோரு இடத்தில் மீண்டும் குழி தோண்ட சொல்வார். அவருக்கு ஒரு செயல் முழு திருப்தி அளிக்கவில்லை என்றால், சரியான சீன் வரும்வரை அவர் மெனக்கடுவார். நடிப்பில் சமரசத்திற்கு இடம் கிடையாது என்றிருப்பவர். சிறந்த நடிப்பு, சிறந்த சீன் கிடைக்கும்வரை எதையும் செய்வார்

வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்:

அப்போதெல்லாம், ஷூட்டிங்கிற்கு பேருந்தில்தான் வந்து செல்வேன். பிரின்ஸ் பிளாசாவில் ஷூட்டிங். நான் அம்பத்தூரில் இருந்து இரண்டு பேருந்துகள் மாறி பயணம் செய்து வரவேண்டும். அன்று தாமதமாகிவிட்டது. அப்போதெல்லாம் ஐந்து ரூபாய் கொடுத்து 2 1/2 ரூபாயக பிரித்து பேடா எடுத்துக்க சொல்வாங்க. காலை 7 மணிக்கு ஷூட்டிங். நான் 7:10 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றேன். அப்போது ஷூட்டிங் நடைபெற்றது தெரியாமல், உள்ளே நுழைந்துவிட்டேன். கமல் சார் திட்டினார். எனக்கும் பயமாக இருந்தது.நான் ஏற்கனவே தாமதமாக வந்தேன். ஷூட்டிங் நடுவே சென்றுவிட்டேன். நான் தவறு செய்யவில்லை என்றால் எப்போதும் பயப்பட மாட்டேன். நான் தானே தவறு செய்தேன். பின்னர், ஷூட்டிங் முழுவதும் கமல் சாரிடம் வருத்துத்துடன் எக்ஸ்கியூஸ் கேட்க அவர் அருகிலேயே காத்திருந்தேன். அவர் எதுவும் பேசாமல் என்னை கவனித்துக்கொண்டிருந்தார். அன்றிலிருந்து நான் எப்போதும் தாமதாக வரக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதைக் கற்றுக்கொண்டு, பழக்கமாக்கினேன்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Embed widget