மேலும் அறிய

Vijayakanth Re Entry: தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரீ கொடுக்கும் விஜயகாந்த்! இயக்குநர் சொன்ன சூப்பர் தகவல்!!

விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் எனும் படத்தில் விஜயகாந்த் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்தன.

நடிகர் விஜயகாந்த் இயக்குனர் விஜய் மில்டனின் புதிய படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக முன்னதாகத் தகவல் பரவிய நிலையில், விஜயகாந்தின் கதாபாத்திரம் குறித்து விஜய் மில்டன் பேசியுள்ளார்.

80கள் தொடங்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு பிரத்யேக இடம் பிடித்துள்ளவர் நடிகர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

கேப்டன் விஜயகாந்த்

தன்னுடைய ஆரம்பகால திரை வாழ்வில் பல தோல்விகளை சந்தித்தாலும், தொடர்ந்து அவரது விடாமுயற்சியின் காரணமாக வெள்ளி விழா நாயகனாக உருவெடுத்தார் விஜயகாந்த்.

1984ஆம் ஆண்டு ஒரே ஆண்டில் 18 படங்கள் கொடுத்தவர் எனும் பெருமைக்கும் சாதனைக்கும் ஒரே சொந்தக்காரராக விஜயகாந்த் இன்று வரை விளங்குகிறார்.


Vijayakanth Re Entry: தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரீ கொடுக்கும் விஜயகாந்த்! இயக்குநர் சொன்ன சூப்பர் தகவல்!!

ஊமை விழிகள், சின்ன கவுண்டர், ஹானஸ்ட் ராஜ், புலன் விசாரணை என வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்த விஜயகாந்த், தனது 100ஆவது படமான கேப்டன் பிரபாகரன் மூலம் கேப்டன் எனும் அடைமொழியைப் பெற்றார்.

அரசியல் எண்ட்ரீ

 2005ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியைத் தொடங்கி அரசியலில் அடி எடுத்து வைத்த விஜயகாந்த் 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று விருதாச்சலம் தொகுதி சட்டபேரவை உறுப்பினரானார்.

2011ஆம் ஆண்டு தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றதை அடுத்து முழு நேர அரசியலில் ஈடுபடத் தொடங்கிய விஜயகாந்த், 2016ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கி படுதோல்வியை சந்தித்தார்.

சினிமாவில் ரீ எண்ட்ரீ

கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக தொடர்ந்து மருத்துவமனைகள் சென்று சிகிச்சைப் பெற்று வருகிறார், பொது நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் உள்ளார். இந்நிலையில், முன்னதாக விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் ’மழை பிடிக்காத மனிதன்’ எனும் படத்தில் விஜயகாந்த் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்தன.

இதனை சமீபத்திய பேட்டியில் இயக்குநர் விஜய் மில்டனும் உறுதிப்படுத்தினார். இந்நிலையில், முன்னதாக விஜயகாந்த் கதாபாத்திரம்  குறித்துப் பேசியுள்ள விஜய் மில்டன், “விஜயகாந்த் பகுதிகளை நாங்கள் இன்னும் படமாக்கவில்லை. மேலும் அவரது உடல்நிலை காரணமாக படமாக்கம் தாமதமாகிறது. ஆனால் அவரை வைத்து படமாக்குவோம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

படத்தின் அவரது இருப்பு மிகவும் அவசியமானது. ஆனால் அவர் படத்தில் தோன்றுகிறாரா அல்லது அவரது குரலில் தோன்றுகிறாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் " என்று கூறியுள்ளார்.

தனது மகன் சண்முகபாண்டியன் அறிமுகமான 'சகாப்தம்’ என்ற படத்தில் விஜயகாந்த் கடைசியாக நடித்திருந்தார். அந்தப் படம் 2015ஆம் ஆண்டு வெளியானது. ஒருவேளை மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் நடிக்கும்பட்சத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு திரையில் மீண்டும் தோன்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!
அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Embed widget