மேலும் அறிய

Director Nagaraj: குடியால் சீரழிந்த வாழ்க்கை.. 13 ஆண்டுகளுக்குப் பின் படம் இயக்கிய தினந்தோறும் நாகராஜ்!

ஆகாயம் படத்தில் குடி உள்ளே போனால் குடும்பம் வெளியே போய்விடும் என்ற வசனம் உள்ளது. என்னைப் போல சினிமா மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் குடிக்கு அடிமையானவர்கள் இருக்கிறார்கள் என இயக்குநர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

குடியால் வாழ்க்கையில் 25 ஆண்டுகளைத் தொலைத்தவர்களில் நானும் ஒருவன் என இயக்குநர் நாகராஜ் தெரிவித்துள்ளார். 

முரளி நடித்த தினந்தோறும் படம் மூலம் இயக்குநரானவர் நாகராஜ்.இந்த படம் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் அதன்பிறகு அவர் பல ஆண்டுகள் படம் இயக்கவில்லை. கௌதம் மேனனின் மின்னலே, காக்க காக்க ஆகிய படங்களுக்கு நாகராஜ் வசனம் எழுதியிருந்தார். கடைசியாக 2013ம் ஆண்டு மத்தாப்பூ என்ற படத்தை இயக்கியவர் இப்போது 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் ஆகாயம் என்ற படத்தை எடுத்துள்ளார். 

இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், ஆலிஷா மிராணி உள்ளிட்டோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படத்தை டெல்டா டாக்கீச் சார்பில் ஜெயச்சந்திரன் தயாரித்துள்ளார். ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் நாகராஜ், மறுபடியும் என்னை இந்த இடத்தில் நிற்க வைத்த இறைவனுக்கு நன்றி. 3 மணி நேரத்தில் நான் சொன்ன கதையைக் கேட்டு படம் பண்ண ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர் ஜெயச்சந்திரனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாளை நிறைய படம் பண்ணலாம், பணம் சம்பாதிக்கலாம், மிகப்பெரிய உயரத்துக்கும் போகலாம். ஆனால் நான் இப்படித்தான் சினிமா எடுப்பேன் என்ற என்னிடம் இருந்த திமிர்த்தனத்தை ரசித்து படம் எடுக்க ஒப்புக்கொண்டார். 

என்னைப் போல நிறைய பேர் இருக்கிறார்கள். ஆகாயம் படத்தில் குடி உள்ளே போனால் குடும்பம் வெளியே போய்விடும் என்ற வசனம் உள்ளது. என்னைப் போல சினிமா மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் குடிக்கு அடிமையானவர்கள் இருக்கிறார்கள். எனக்கு அந்த பழக்கம் போய் விட்டது. குடியை வைத்து சிலாகித்து பேசினால் கடுப்பாக இருக்கும். குடிப்பது கொண்டாட வேண்டிய விஷயம் இல்லை. என்னை மாதிரி லட்சக்கணக்கானோர் வாழ்க்கையில் 25,30 ஆண்டுகளை அழித்து விட்டது. குடித்தால் பிரச்னை வரும், குடும்பம் உடையும் அவ்வளவு தான். 

என்னால் அந்த பழக்கத்தில் இருந்து மீள முடியும் என நினைத்தால் மற்றவர்களாலும் முடியும். இங்கு பணத்தை நோக்கி நகர்கிறார்கள் என சொன்னாலும் அன்பாலும் இணைகிறார்கள். அதை அடிப்படையாக கொண்டு தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் இல்லாமல் வாழ்க்கை கிடையாது. நான் இன்றைக்கு இங்கு நிற்க யாரோ என் மீது வைத்த நம்பிக்கை தான். 

அன்பால் தான் கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சராக விஜய் வந்திருக்கிறார். அதற்கு அன்பு தான் காரணம். படம் பார்த்தால் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். என் போன் நம்பரை மனப்பாடமாக தெரியாது. ஆனால் நான் எழுதிய 12 கதைகளில் எந்த காட்சி என்பது மனப்பாடமாக இருக்கும். எந்த துறையிலும் ஒழுக்கமில்லாதவர்கள் வாழவே முடியாது. தோற்றால் தோற்பதை ஒப்புக்கொள்ள முடியும். அப்போது தான் அடுத்த வெற்றியை நோக்கி நகர முடியும் என பேசினார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Embed widget