Suriya: நெட்ஃப்ளிக்ஸ் இதெல்லாம் நியாயமா? கிளாரிட்டியே இல்லாம ஒளிபரப்பாகிய விஸ்வநாத் அன் சன்ஸ்!
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகியுள்ள சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ் படத்தின் காட்சிகள் தரமில்லாமல் ஒளிபரப்பாகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் விஸ்வநாத் அன் சன்ஸ். கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்கில் வெளியான இந்த படம் நெட்ஃப்ளிக்சில் நேற்று வெளியானது.
விஸ்வநாத் அன் சன்ஸ்:
கருப்பு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு வெளியான இந்த படம் அந்த படத்தின் அளவிற்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் வர்த்தக ரீதியாக நல்ல வசூலைக் குவித்தது. நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ள விஸ்வநாத் அன் சனஸ் படத்தில் யாரும் எதிர்பாராத வகையில் படத்தின் காட்சிகள் சில ப்ளர் ஆக ஒளிபரப்பாகிறது. இது நெட்ஃப்ளிக்ஸ் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
நெட்ஃப்ளிக்ஸில் தெளிவில்லாத காட்சி:
நெட்ஃப்ளிக்ஸ் போன்ற உலகப்புகழ்பெற்ற ஓடிடி தளத்தில் இதுபோன்று காட்சிகள் தரமில்லாமல் இருக்கலாமா? பணம் கட்டி பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்று பார்க்க முடியாத அளவிற்கு காட்சிகள் தரமில்லாமல் தெளிவில்லாமல் இருக்கலாமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இப்படிதான் Netflix ல வருதா என்ன??😳 pic.twitter.com/BBSP7cs21R
— Vinoth Kumar (@TalkiesFriday) September 11, 2026
தெளிவில்லாமல் இடம்பிடித்த காட்சிகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெட்ஃப்ளிக்சை பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு உடனடியாக நெட்ஃப்ளிக்ஸ் தீர்வு காணுமா? என்ற கேள்வியும் ரசிகர்கள் முன்வைத்துள்ளனர்.
நெட்ஃப்ளிக்ஸில் 325 மில்லியன் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தமட்டில் நெட்ஃப்ளிக்ஸில் 20 மில்லியன் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் நெட்ஃப்ளிக்சை பயன்படுத்தி வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு ஓடிடி தளத்தில் தெளிவே இல்லாமல் காட்சி இடம்பெறலாமா? என்று கடுமையான விமர்சனங்கள் நெட்ஃப்ளிக்ஸ் மீது முன்வைத்து வருகின்றனர்.
நட்சத்திர பட்டாளமா?
இந்த விஸ்வநாத் அன் சன்ஸ் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். ஸ்ரீகரா ஸ்டூடியோஸ், சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ், ஃபார்ச்சுன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துள்ளது. முழுக்க முழுக்க குடும்ப திரைப்படமான இந்த படத்தில் சூர்யாவுடன், ராதிகா, மமைதா பைஜு, ரவீனா டாண்டன், சுனில் ரெட்டி, நாசர், ராஜீவ் மேனன், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் என பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு நிமிஷா ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் நூலி எடிட்டிங் செய்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















