![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Director Siva Meets Vijay: விஜயிடம் இருந்து வந்த கிரீன் சிக்னல்.. வீட்டிற்கே சென்ற சிறுத்தை சிவா.. வெளியான அப்டேட்!
இயக்குநர் சிறுத்தை சிவா நடிகர் விஜயை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![Director Siva Meets Vijay: விஜயிடம் இருந்து வந்த கிரீன் சிக்னல்.. வீட்டிற்கே சென்ற சிறுத்தை சிவா.. வெளியான அப்டேட்! Director Siva Meets Actor Vijay at his Office Today Does Vijay Siruthai Siva Combo to happen Director Siva Meets Vijay: விஜயிடம் இருந்து வந்த கிரீன் சிக்னல்.. வீட்டிற்கே சென்ற சிறுத்தை சிவா.. வெளியான அப்டேட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/01/428774e369483229927fb4a54e7bab22_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் விஜயை இயக்குநர் சிறுத்தை சிவா சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தத் தகவலின் படி, இயக்குநர் ‘சிறுத்தை சிவா’ நடிகர் விஜயை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியதாகவும், இந்த சந்திப்பில் நடிகர் விஜய் தனக்காக ஒரு கதையை எழுதுமாறு சிவாவிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான சிவா, அஜித்தின் வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானார்.
இதில் ‘விசுவாசம்’ திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இதனையடுத்து ரஜினிகாந்தை வைத்து ‘ அண்ணாத்த’ படத்தை இயக்கினார் சிவா. இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதாகவே சொல்லப்பட்டது.
View this post on Instagram
இதனையடுத்து இவரது இயக்கத்தில் அடுத்து நடிக்க போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில்தான் இவரும் விஜயும் சந்தித்து பேசியுள்ளனர். தற்போது நடிகர் விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தில் நடித்து வருகிறார்.
View this post on Instagram
அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)