RAP019 Film Updates: லிங்குசாமி ஷூட்டிங்கில் இயக்குநர் ஷங்கர் - ஆச்சர்யத்தில் படக்குழு..!
இயக்குநர் லிங்குசாமி, நாயகன் ராம் பொதினேனி, நாயகி கீர்த்தி ஷெட்டி, நடிகை நதியா மற்றும் நடிகர்கள், தொழில் நுட்ப குழுவினர் அனைவரும் இயக்குநர் ஷங்கருக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு திரை முன்னணி நாயகன் ராம் பொதினேனி நடிக்கும் #RAPO19 படப்பிடிப்பிற்கு ஆச்சர்யகரமாக பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் வருகை புரிந்து, படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.
ஆனந்தம் படம் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. முதல் படத்திலேயே வெற்றி கொடுத்த அவர், அடுத்து ரன், சண்டைகோழி, பையா என பல ஹிட் படங்களை கொடுத்தார். அஞ்சான் படம் தோல்வியால் சில ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்த அவர், சண்டை கோழி 2 எடுத்தார். அதுவும் அவருக்கு எதிர்பாராத வெற்றியை கொடுக்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்த அவர், தெலுங்கு நடிகர் ராம் பொதினேனியை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கி வருகிறார். இன்னும் தலைப்பிடாத இந்தப் படத்தை #RAPO19 என்று அழைத்து வருகின்றனர்.
Actor Vijay HC Case: விஜய் மறைத்த ரகசியம்; கண்டுபிடித்த நீதிபதி! வெளியானது புது தகவல்!
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் ஷங்கர் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்து, அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இயக்குநர் லிங்குசாமி, நாயகன் ராம் பொதினேனி, நாயகி கீர்த்தி ஷெட்டி, நடிகை நதியா மற்றும் நடிகர்கள், தொழில் நுட்ப குழுவினர் அனைவரும் இயக்குநர் ஷங்கருக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளித்தனர். இயக்குநர் ஷங்கர் படப்பிடிப்பு தளத்தில், படத்தின் உடைய பாடலை கேட்டுவிட்டு, மிக அழகான மெலோடியான பாடல் என பாராட்டினார். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசா சித்தூரி Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் இந்தப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார். அரசு அறிவித்துள்ள கொரோனா சம்மந்தமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், முறையாக கடைப்பிடிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
விரைவில் திரைக்கு கொண்டுவரும் நோக்கத்தில், முழுக்க முழுக்க, ஸ்டைலீஷ், ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகும் RAPO19 படத்தின் படப்பிடிப்பு, வேகமாக நடைபெற்றுவருகிறது.
Had a fabulous day in Chennai yesterday !
— Ram Charan (@AlwaysRamCharan) July 5, 2021
Thank you @shankarshanmugh Sir and family for being such great hosts.
Looking forward to #RC15.
Updates coming very soon! @SVC_official #SVC50 pic.twitter.com/4qNLwF9HYw
இயக்குநர் ஷங்கர் தெலுங்கின் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரணை வைத்து தெலுங்கில், தமிழ் புதிய படம் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு தமன் இசையக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தொடர்பாக, ராம் சரணும், தயாரிப்பாளார் தில் ராஜூவும் ஷங்கரை சந்தித்து பேசினார்கள். இந்தப் படம் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் ராம் சரண் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tax Evasion cases: விஜய் உடன் ஜோடி சேரும் கேரள பிரபலங்கள்... ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் வரி ஏய்ப்பும்!





















