KISS Trailer: அவன் கிஸ் அடிச்சதை நான் பார்த்தேன்.. சீ.. சீ.. சீ.. கவினுக்கு மட்டும் தான் இப்படி தோணுது
கவின் நடிப்பில் உருவாகியுள்ள கிஸ் படத்தின் டிரைலர் வெளியானது.

நடிகர் கவின் நடித்துள்ள கிஸ் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. காதல், ரொமான்ஸ் காட்சிகள் என கலகலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நடன இயக்குநர் சதிஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் அயோத்தி பட புகழ் பிரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, விடிவி கணேஷ், தேவயாணி, ஆர்.ஜே.விஜய் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
கிஸ் பட டிரைலர்
நடிகர் கவின் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை வியக்க வைக்கும் கதாப்பாத்திரமாகவே அமைந்திருக்கிறது. டாடா படத்திற்கு பிறகு மீண்டும் காதல், ரொமாண்டிக் படமான கிஸ் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலரின் முதல் காட்சியே லிப்டில் முத்தக்காட்சியுடன் தொடங்குகிறது. லிப்டில் லவ்வர்ஸ் இருவரும் லிப்லாக் செய்வதை நேரடியாக பார்க்கும் கவின் கேவளமாக சீ... சீ... சீ.. என சொல்கிறார். இதை பார்க்கும் ஆடியன்ஸ்க்கும் என்னப்பா கவினுக்கு முத்தக்காட்சி பிடிக்கலையா என்பது போல் தோன்ற வைக்கிறது. நடனம் கற்றுக்கொள்ள போகும் இடத்தில் ப்ரீத்தி அஸ்தானியை பார்க்கும் கவினுக்கும் நட்பு காதலாக மாறுவது தெரிகிறது.
கிஸ் என்றால் கவினுக்கு அலர்ஜி
கதையின் நாயகனாக இருக்கும் கவினுக்கு இப்படத்தில் காதலுக்கும், ரொமான்ஸ்க்கும் ரொம்ப தூரம் என்பது போலவே தெரிகிறது. ஆனால், லிப் லாக் மற்றும் முத்தக் காட்சிகளை பார்த்தால் அலர்ஜி. அவருக்கும் அதுக்கும் செட் ஆகாது போல. அப்படிப்பட்ட இளைஞனுக்கும் காதல் வந்தால், காதல் பெய்லியர் ஆனால், காதலி விட்டு போனால் என்ன நடக்கும் என்பது தான் படமாக இருக்கும் என கிஸ் படத்தின் டிரைலர் உணர்த்துகிறது. படத்தின் டிரைலர் ஒரு படத்திற்கான அனைத்து விறுவிறுப்பு காமெடியுடன் நகர்வது ரசிக்க வைத்திருக்கிறது. யாராவது முத்தமிட்டுக் கொள்வதை பார்த்தால் கவினுக்கு அந்தமாதிரி கனவு வருவதையும் டிரைலரில் வசனத்தின் மூலம் தெரிவித்துள்ளனர். ஒரு வேளை அதுதான் படத்தின் பிரதான பிரச்னையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
This is your cue to get #KISS-ed, KISS Trailer out now 💋#KissTrailer
— raahul (@mynameisraahul) September 9, 2025
🔗 https://t.co/fY9gjWlzjw@Kavin_m_0431 @mynameisraahul @dancersatz @preethioffl @JenMartinmusic @dop_harish @SureshChandraa @peterheinoffl #MohanaMahendiran @editorrcpranav @gopiprasannaa @MythriRelease… pic.twitter.com/tNC4soOS4W




















