Karthigai Deepam: ஓய் புருஷ்.. நமக்கு எப்போ ஃபர்ஸ்ட் நைட்.. கார்த்திக்கை பார்த்தாலே ரேவதிக்கு அந்த நினைப்புதான்
விறுவிறுப்பாக இருக்கும் கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதிக்கும் ராஜாவுக்கும் எப்போது முதலிரவு என்பது தான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்றைய எபிசோடில் கார்த்திக்கிற்கும், ரேவதிக்கும் சாந்திமுகூர்த்தம் நடைபெற இருக்கிறது. இதுகுறித்த சுவராஸ்யமான சம்பவங்களை இதில் காணலாம். பரமேஸ்வரி பாட்டி, வீட்டிற்கு ஜோசியரை வர வைத்து நவீன் துர்காவின் சாந்தி முகூர்த்தத்திற்கு நாள் குறிக்கிறார். அப்படியே கார்த்திக் ரேவதிக்கும் சாந்தி முகூர்த்தத்திற்கு நாள் குறிக்க, இதற்கு தடை போட நினைக்கும் கார்த்திக்கிடம் அமைதியா இரு என்று பரமேஸ்வரி ஒரே வார்த்தையில் ஆஃப் செய்துவிட்டார்.
நமக்கு எப்போ முதலிரவு
நவீன் துர்காவின் சாந்தி முகூர்த்தத்திற்காக பூக்களால் ரேவதி கட்டிலை அலங்கரிக்கிறார். அப்போது நமக்கும் இப்படி நடந்தால் எவ்வளவு நல்லா இருக்கும், இந்த ராஜா தான் எதுக்குமே ஒத்து வரமாட்டேங்குறான் என மனசுக்குள்ளே பேசிக்கொண்டே இருக்கிறாள். அப்போது ராஜா அந்த வழியாக வர, ரேவதி, ராஜாவை (கார்த்திக்) பாசத்தோடு அழைத்து, நமக்கு எப்போ இப்படி முதலிரவு நடக்கும் என கேட்கிறாள். உடனே கார்த்தி, நாம பாட்டி வீட்டில் இருக்கோம், எதையாவதை பேசிக்கொண்டு இருக்காதே என்கிறான். உடனே பாட்டி வீடும் நம்ம வீடு தானே, எங்க நடந்தா என்ன, "நான் ஆசையா உன்கிட்ட எப்போ முதலிரவு என்று கேட்கிறேன், நீ இப்படி பேசாதேனு சொன்னால் என்ன அர்த்தம் புருஷா" என்னை லவ் பண்றேனு சொல்லு டா என ரேவதி ராஜாவிடம் கெஞ்சுகிறாள். எதற்கும் பிடி கொடுக்காத ராஜா இதுக்கு மேலே உன்கிட்ட பேச முடியாது எனக் கூறிவிட்டு அங்கிருந்து நைசாக நகர்ந்து செல்கிறான்.
சிறையில் இருந்து ரிலீஸ் ஆன காளியம்மாள்
இருந்தாலும் ரேவதியின் ஏக்கமும், காதலும் சரிதானே என்று நினைத்தாலும், ஏதோ ஒன்று அவனை ரேவதியிடம் நெருங்கி செல்வதை தடுக்கிறது என்பது மட்டும் புரிய வருகிறது. மறுபக்கம் சிறையில் இருந்து வெளியே வரும் காளியம்மாள். இப்பவே என்னுடைய மருமகள் சந்திரகலாவை பார்க்க வேண்டும் என சிவனாண்டியிடம் கூறுகிறாள். உடனே சிவனாண்டி சந்திரகலாவிற்கு ஃபோன் செய்து சித்தி உன்னை உடனே பார்க்க வேண்டுமாம். நீ உடனே கிளம்பி வா என சொல்கிறாள். மறுபக்கம், ராஜாவும், மயில்வாகனமும் மண்டபத்திற்கு சென்று அங்கு காணாமல் போன செல்போன் குறித்து விசாரிக்கிறார்கள்.
ராஜாவின் அடுத்த திட்டம் என்ன?
அங்கிருக்கும் மேனேஜர், சார் யாராவது வந்து கொடுத்தால் கண்டிப்பா உங்க கிட்ட கொடுத்திருப்பேன். ஆனால், யாருமே தரவில்லை சார் வேண்டுமானால் நீங்க எல்லா அறைக்கும் போய் பாருங்க என சொல்ல ராஜா மயில்வாகனத்திடம் அறையை செக் செய்ய சொல்கிறான். அதே நேரத்தில் காளியம்மாள் சிறையில் இருந்து வந்த செய்தி தெரிந்ததும் ராஜாவின் முகம் மாறிவிடுகிறது. இருக்கின்ற பிரச்னையில் இது வேற அடுத்து காளியம்மாள் என்ன பிளான் பண்ண போறாங்க தெரியலை, எதற்கும் நாம உஷாராக இருக்க வேண்டும் என எண்ணுகிறான். அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற பதற்றமும் உருவாகிறது. ராஜா ( கார்த்திக்) காளியம்மான் சதி திட்டத்தை முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






















